Tamilnadu Weather Alert:உஷார் மக்களே..! கொளுத்தப்போகும் வெயில்.. வானிலை கொடுத்த எச்சரிக்கை.. - Tamil News | tamilnadu weather alert 25 sep likely to experience more heat in upcoming days imd report in tamil | TV9 Tamil

Tamilnadu Weather Alert:உஷார் மக்களே..! கொளுத்தப்போகும் வெயில்.. வானிலை கொடுத்த எச்சரிக்கை..

Updated On: 

25 Sep 2024 13:42 PM

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Tamilnadu Weather Alert:உஷார் மக்களே..! கொளுத்தப்போகும் வெயில்.. வானிலை கொடுத்த எச்சரிக்கை..

கோப்பு புகைப்படம்

Follow Us On

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இதன் காரணமாக வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையும் நாளை மறுநாள், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அதன்பின் வரும் 1 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (25.09.2024 மற்றும் 26.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

வடகுத்து (கடலூர்) 5, காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), அழகரை எஸ்டேட் (நீலகிரி), மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), திருவூர் AWS (திருவள்ளூர்), வனமாதேவி (கடலூர்), SRC குடிதாங்கி (கடலூர்), மண்டலம் 06 D65 கொளத்தூர் (சென்னை), தாம்பரம் (செங்கல்பட்டு), மண்டலம் 11 U32 மதுரவாயல் (சென்னை), மண்டலம் 11 வளசரவாக்கம் (சென்னை) தலா 3, சோழவரம் (திருவள்ளூர்), சாய்ராம் கல்லூரி ARG (செங்கல்பட்டு), மண்டலம் 12 ஆலந்தூர் (சென்னை), மண்டலம் 08 மலர் காலனி (சென்னை), கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), திருத்தணி (திருவள்ளூர்), புழல் ARG (திருவள்ளூர்), அவலாஞ்சி (நீலகிரி), VIT சென்னை AWS (செங்கல்பட்டு), எம்ஜிஆர் நகர் (சென்னை), NIOT_பள்ளிக்கரணை ARG (சென்னை), திண்டிவனம் (விழுப்புரம்), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), கடலூர் (கடலூர்), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), மண்டலம் 10 கோடம்பாக்கம் (சென்னை), தலைவாசல் (சேலம்) தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

25.09.2024 முதல் 28.09.2024 வரை: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Also Read: அப்படி போடு.. மாணவர்களுக்கு குஷியான நியூஸ்.. காலாண்டு விடுமுறை நீடிப்பு.. வெளியான அறிவிப்பு..

வங்கக்கடல் பகுதிகள்:

25.09.2024: தெற்கு வங்கக்கடல், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
26.09.2024: தெற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

27.09.2024: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Also Read: தள்ளிப்போகிறதா விஜய்யின் த.வெ.க மாநாடு.. மீண்டும் ஒரு புதிய சிக்கல்..

அரபிக்கடல் பகுதிகள்:

25.09.2024: தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

26.09.2024 முதல் 29.09.2024 வரை: தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related Stories
TN Cabinet Reshuffle : தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய மாற்றம்.. செந்தில் பாலாஜி முதல் கோவி செழியன் வரை.. யார் யாருக்கு என்ன துறை!
Chennai Powercut: செப்டம்பர் 30 ஆம் தேதி.. சென்னையில் முக்கிய பகுதிகளில் மின்தடை..
Tamilnadu Weather Alert: திருச்சியில் 11 செ.மீ மழை பதிவு.. இன்றும் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
கடந்த 10 மாதத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் – விழிப்புணர்வு மாரத்தானில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..
TN Cabinet Reshuffle: செந்தில் பாலாஜி உட்பட நான்கு அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யாருக்கு எந்த துறை?
Tamilnadu Cabinet Reshuffle: இளைஞரணி செயலாளர் டூ துணை முதலமைச்சர்.. அமைச்சர் உதயநிதியின் அரசியல் பயணம்..
நடிகை ஐஸ்வர்ய லட்சுமியின் நியூ ஆல்பம்
ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஆலிவ் ஆயிலின் நன்மைகள்..!
சருமத்திற்கு பல நன்மைகளை தரும் கற்றாழை..!
புதினாவை தினமும் மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
Exit mobile version