5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Weather Alert: தென் மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் மழை.. இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எங்கே?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamilnadu Weather Alert: தென் மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் மழை.. இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எங்கே?
மழை நிலவரம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 03 Nov 2024 09:12 AM

தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. தென் மேற்கு பருவ மழையை தொடர்ந்து அதிகப்படியாக மழை தருவது இந்த வடகிழக்கு பருவ மழை தான். இந்த காலக்கட்டத்தில் வட தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பதிவாகும். அந்த வகையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை தொடங்கியதுமே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிபேட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பதிவானது. அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. சென்னை பொறுத்தவரை மழை பதிவு இல்லாமல் வறண்ட வானிலையே நிலவுகிறது.

தென் மாவட்டக்களில் கொட்டும் மழை:

தென் மாவட்டங்களில் வரும் நாடகளில் நல்ல மழை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் வரும் 8 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: முதல் தேர்தலை சந்திக்கும் பிரியங்கா காந்தி.. வயநாட்டில் 5 நாட்கள் தொடர் பிரச்சாரம்..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீவிரமடையும் வடகிழக்கு பருவ மழை:

இந்த நிலையில் நவம்பர் மாதம் தொடக்கம் முதல் வடகிழக்கு பருவ மழை தீவிரமடையும் என்றும், சுமார் 123% அதிக மழை பொழிவு இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது வங்கக்கடலில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது தமிழ்நாடு ஆந்திரா நோக்கி நகரும் காரணத்தால் சென்னை உட்பட பல மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது 7 ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest News