Tamilnadu Weather Alert: அடுத்த 5 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதா? - Tamil News | tamilnadu weather alert 3 october south tamilnadu to experience heavy rainfall for next 5 days imd report | TV9 Tamil

Tamilnadu Weather Alert: அடுத்த 5 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதா?

Published: 

03 Oct 2024 13:52 PM

தமிழ்நாட்டில் இன்று, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamilnadu Weather Alert: அடுத்த 5 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதா?

கோப்பு புகைப்படம்

Follow Us On

லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நாளை புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 5 ஆம் தேதி,  புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி, நீலகிரி, ஈரோடு, சேலம், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 6 ஆம் தேதி,  இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அக்டோபர்  7 மற்றும் 8 ஆம் தேதி கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள், கோவை மற்றும், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: வேட்டையன் படத்திற்கு எதிரான வழக்கு… மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), ஏலகிரி ARG (திருப்பத்தூர்), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி) தலா 9, வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), ஆம்பூர் (திருப்பத்தூர்) தலா 8, TCS மில் கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), அடையாமடை (கன்னியாகுமரி), BASL வெங்கூர் (கள்ளக்குறிச்சி) தலா 7,

மேலும் படிக்க: ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவிற்கு ஜாமின் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ..

தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), திருக்கோயிலூர் ARG (கள்ளக்குறிச்சி) தலா 6, விழுப்புரம் (விழுப்புரம்), திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி), தக்கலை (கன்னியாகுமரி), வனமாதேவி (கடலூர்), KCS மில்-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), சுருளக்கோடு (கன்னியாகுமரி) தலா 5, ஓசூர் (கிருஷ்ணகிரி), சிற்றாறு-I (கன்னியாகுமரி), SRC குடிதாங்கி (கடலூர்), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), வேலூர் (வேலூர்) தலா 4,

ஆலங்காயம் (திருப்பத்தூர்), மடத்துக்குளம் (திருப்பூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), சங்கரி துர்க்கம் (சேலம்), நெய்யூர் AWS (கன்னியாகுமரி), பவானி (ஈரோடு), ஆழியார் (கோயம்புத்தூர்), பெரியகுளம் (தேனி), ஓசூர் AWS (கிருஷ்ணகிரி), பாலமோர் (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), பல்லடம் (திருப்பூர்), குழித்துறை (கன்னியாகுமரி), சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), செங்கம் (திருவண்ணாமலை), கன்னிமார் (கன்னியாகுமரி), எடப்பாடி (சேலம்), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி) தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version