Tamilnadu Weather Alert: தென் மாவட்டங்களில் இன்று சம்பவம்.. வெளுக்கப்போகும் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! - Tamil News | tamilnadu weather alert 30th september heavy rainfall to be expected for today days in tuticorin tirunelveli kanyakumari and others districts imd report in tamil | TV9 Tamil

Tamilnadu Weather Alert: தென் மாவட்டங்களில் இன்று சம்பவம்.. வெளுக்கப்போகும் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை!

Updated On: 

30 Sep 2024 06:59 AM

Today weather: உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Tamilnadu Weather Alert: தென் மாவட்டங்களில் இன்று சம்பவம்.. வெளுக்கப்போகும் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை!

மழை (picture credit: PTI)

Follow Us On

உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் அக்டேபார் 5ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Also Read: உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கியது ஏன்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

30.09.2024: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

03.10.2024: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

30.09.2024: தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Also Read: தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய மாற்றம்.. செந்தில் பாலாஜி முதல் கோவி செழியன் வரை.. யார் யாருக்கு என்ன துறை!

01.10.2024: தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக உயர்ந்தது கிட்டத்தட்ட 110 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகி வருகிறது. குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் இது போன்ற அதிகபட்ச வெப்பநிலை பதிவாவது இதுவே முதல் முறையாகும். இந்த வழக்கத்திற்கு மாறான வெப்பநிலையால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருந்தனர்.

பொதுவாக ஏப்ரல், மே, ஜூன் போன்ற காலக்கட்டத்தில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் கடந்து பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு மாறாக மே மற்றும் ஜூன் ஆகிய மதங்களில் நல்ல மழை பதிவு இருந்தது. ஜூன் மாதம் முடிந்தது முதல் ஜூலை தொடக்கத்தில் இருந்து வெப்பநிலை கணிசமாக உயரத்தொடங்கியது.

அதுவும் செப்டம்பர் மாதத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால், செப்டம்பர் மாதத்தில் கடைசி ஒரு ஐந்து நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை வெளுக்கிறது. சென்னையிலும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

இந்தியாவின் பசுமையான சுற்றுலா இடங்கள் என்னென்ன தெரியுமா?
நண்டில் இப்படி ஒரு விஷயம் இருக்கா? அறிந்திடாத மருத்துவ நன்மைகள்..!
மன அழுத்தம் குறைய வேண்டுமா? அப்போ இது ஒன்னே போதும்.
நடிகை ஹன்சிகா மோத்வானியின் ரீசென்ட் ஆல்பம்
Exit mobile version