5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

SchooL Leave: சில்லென மாறிய சென்னை.. இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SchooL Leave: சில்லென மாறிய சென்னை.. இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 04 Nov 2024 08:03 AM

தொடர் கனமழை ஒட்டி இன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுக்காவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை மெல்ல மெல்ல தீவிரம் அடையும் நிலையில் கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பதிவாகி வருகிறது. நேற்று முன் தினம் நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், பர்லியாறு, கோவை மாவட்டம் கல்லாறு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக இன்று குன்னூர் தாலுக்காவில் இருக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பூமியின் உஷ்ணம் சற்று தணிந்துள்ளது.

 

சென்னையில் கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், தேனாம்பேட்டை, பட்டினப்பாக்கம், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பதிவாகியுள்ளது. மேலும் நாளை வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், வரும் 7 ஆம் தேதி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

தீவிரமடையும் வடகிழக்கு பருவ மழை:

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா நோக்கி நகரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் அதாவது நவம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் நல்ல மழை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


ஏற்கனவே கடந்த மாதம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் அது ஆந்திரா நோக்கி நகர்ந்து சென்றது. இதன் காரணமாக சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்பி பெறப்பட்டது.

மேலும் படிக்க: சென்னை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் இன்று மின் தடை.. மாவட்ட வாரியான லிஸ்ட் இதோ..

10 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:

இந்நிலையில் இன்று காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும், தென் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: டீ, பிஸ்கட் எல்லாம் இனி சாப்பிட முடியாது போலயே.. உயரப்போகுது விலை… வெளியான முக்கிய தகவல்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்கடல் பகுதிகளில், நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல் நாளை மறுநாள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் வரும் 7 ஆம் தேதி வாக்கில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

Latest News