Tamilnadu Weather Alert: அடுத்த 4 நாட்களுக்கு பிச்சு உதறபோகுது மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? - Tamil News | tamilnadu weather alert 4th october heavy rainfall to be expected for next four days in salem erode tiruppur and others districts imd report in tamil | TV9 Tamil

Tamilnadu Weather Alert: அடுத்த 4 நாட்களுக்கு பிச்சு உதறபோகுது மழை.. எந்தெந்த மாவட்டங்கள்?

Updated On: 

04 Oct 2024 13:58 PM

Today Weather: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். மேலும், அடுத்த 4 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Weather Alert: அடுத்த 4 நாட்களுக்கு பிச்சு உதறபோகுது மழை.. எந்தெந்த மாவட்டங்கள்?

மழை (picture credit: PTI)

Follow Us On

தமிழ்நாட்டில் கடந்த மாதம் வெயில் கொளுத்தி எடுத்தது. குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் தமிழகம் முழுவதும் வெயில் இயல்பை விட அதிகமாக இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகரிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வானிலை மையம் இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

கனமழை எச்சரிக்கை:

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read: “ஏதோ பேருக்கு வந்த கட்சி அல்ல” – தொண்டர்களுக்கு விஜய் எழுதிய முதல் கடிதம்.. மாநாடு குறித்து விளக்கம்!

மேலும், நாளையும் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும்
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, ஈரோடு, சேலம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 6ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 7ஆம் தேதி கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 8ஆம் தேதி வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி,திருப்பூர், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வரும் 9ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வரும் 10ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Also Read: தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய சின்னங்கள்… யுனெஸ்கோ அறிவித்த இடங்கள்!

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகளில் இன்று வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version