5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Weather Alert: 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எப்படி?

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பதிவாகி வருகிறது. நகரின் ஒரு சில இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. இந்த மழையானது இன்னும் சில நாட்களுக்கு அதாவது அடுத்த 5 நாட்களுக்கு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்று காரணமாக சென்னை தொடங்கி ராமநாதபுரம் வரையிலான கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

Tamilnadu Weather Alert: 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எப்படி?
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 07 Nov 2024 20:06 PM

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சுவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் இதன் காரணமாக, நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பரவலாக பெய்யும் மழை:

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பதிவாகி வருகிறது. நகரின் ஒரு சில இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. இந்த மழையானது இன்னும் சில நாட்களுக்கு அதாவது அடுத்த 5 நாட்களுக்கு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்று காரணமாக சென்னை தொடங்கி ராமநாதபுரம் வரையிலான கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

சென்னையில் குறிப்பாக வட சென்னை பகுதியில் இன்று காலை முதல் நாளை காலை வரை சுமார் 10 செ.மீ வரை மழை பதிவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தென் சென்னை மற்றும் மத்திய சென்னையில் ஆங்காங்கே மட்டும் மழை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ”திருச்சி சூர்யாவிற்கு பாதுகாப்பு வழங்க தேவையில்லை” – உயர்நீதிமன்றத்தில் அரசு பதில்..

மேலும், வரும் 11 ஆம் தேதி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் 12 ஆம் தேதி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: விரைவில் 5ஜி நெட்வொர்க் சேவை.. களத்தில் இறங்கும் பிஎஸ்என்எல் நிறுவனம்.. முழு விவரம் இதோ!

நவம்பர் 13 ஆம் தேதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Latest News