Tamilnadu Weather Alert: இன்று கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள்.. வானிலை மையம் அலர்ட்! - Tamil News | | TV9 Tamil

Tamilnadu Weather Alert: இன்று கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள்.. வானிலை மையம் அலர்ட்!

Updated On: 

08 Jun 2024 15:17 PM

Rain Update: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,  இன்று தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  நாளை முதல் 14ஆம் தேதி வரை  தமிழகத்தில்  ஓரிரு   இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tamilnadu Weather Alert: இன்று கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள்.. வானிலை  மையம் அலர்ட்!

மழை (மாதிரிப்படம்)

Follow Us On
வானிலை நிலவரம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,  இன்று தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  நாளை முதல் 14ஆம் தேதி வரை  தமிழகத்தில்  ஓரிரு   இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு: 

09.06.2024 முதல்  12.06.2024 வரை: அதற்கடுத்த  ஐந்து தினங்களுக்கு,  தமிழகம்,  புதுவை மற்றும்  காரைக்கால்  பகுதிகளில், அதிகபட்ச     வெப்ப நிலை 1° –1° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது / மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 33° – 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது / மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தமிழக கடலோரப்பகுதிகள்:

இன்று முதல் 10ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஜூன் 11ஆம் தேதி மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இன்று ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

9.06.204 மற்றும் 11.06.2024: வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால், மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Also Read: 3வது முறை பிரதமராகும் மோடி.. பதவியேற்பில் கலந்து கொள்ளும் உலக தலைவர்கள்!

கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
கல்லீரலை சுத்தப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
சியா விதையில் இவ்வளவு ஆபத்துகள் உள்ளதா?
Exit mobile version