Tamil Nadu Weather : அடுத்த 3 மணி நேரம்.. இந்த மாவட்டங்களில் பிச்சு உதற போகுது மழை.. வானிலை மையம் அலர்ட்!

Rain Update : தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது

Tamil Nadu Weather : அடுத்த 3 மணி நேரம்.. இந்த மாவட்டங்களில் பிச்சு உதற போகுது மழை.. வானிலை மையம் அலர்ட்!

மழை (கோப்புப் படம்)

Published: 

18 May 2024 07:28 AM

அடுத்த 3 மணி நேரம்: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்:

தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

Also Read : Chennai : மும்பை விபத்து எதிரொலி.. சென்னையில் பெரிய பேனர்களுக்கு நடவடிக்கை எடுக்கும் மாநகராட்சி.!

மே 19ஆம் தேதி தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

மே 20ஆம் தேதி தமிழகத்தின் தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்று முதல் 20ஆம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், தெற்கு கேரள கடலோரப்பகுதிகள், மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

Also Read : Courtallam Waterfalls Flood: பயம் காட்டிய குற்றாலம்.. சர்ரென அதிகரித்த தண்ணீர்.. ஷாக் வீடியோ!

 

 

 

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!