Tamilnadu Weather Alert: சென்னையில் பரவலாக மழை.. இன்னும் சில நாட்களுக்கு இப்படி தான் இருக்கும்.. - Tamil News | tamilnadu-weather-alert-november-6-2024-chennai-and-other-coastal-districts-recieve-good-amount-of-rain-know-more-in-details | TV9 Tamil

Tamilnadu Weather Alert: சென்னையில் பரவலாக மழை.. இன்னும் சில நாட்களுக்கு இப்படி தான் இருக்கும்..

வட கிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவி வந்தது. அதே சமயம் தென் மாவட்டங்களில் நல்ல மழை பதிவானது. இந்நிலையில் வங்கக்கடலில் அடர் மேகக்கூட்டங்கள் மற்றும் வடக்கிலிருந்து காற்று வீசுகிறது. இவை இரண்டும் சேர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என கணிக்கப்பட்டது. இது ஆந்திரா மற்றும் தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களை நோக்கி நகரும் எனவும் கூறப்படுகிறது.

Tamilnadu Weather Alert: சென்னையில் பரவலாக மழை.. இன்னும் சில நாட்களுக்கு இப்படி தான் இருக்கும்..

கோப்பு புகைப்படம்

Published: 

06 Nov 2024 22:56 PM

சென்னையில் மாலை 7 மணி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது நள்ளிரவு 1 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ராணிபேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

Also Read: சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. எத்தனை நாட்களுக்கு ?

சென்னையில் மழைக்கு வாய்ப்பு:


வட கிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவி வந்தது. அதே சமயம் தென் மாவட்டங்களில் நல்ல மழை பதிவானது. இந்நிலையில் வங்கக்கடலில் அடர் மேகக்கூட்டங்கள் மற்றும் வடக்கிலிருந்து காற்று வீசுகிறது. இவை இரண்டும் சேர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என கணிக்கப்பட்டது. இது ஆந்திரா மற்றும் தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களை நோக்கி நகரும் எனவும் கூறப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நல்ல மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று இரவு முதல் காலை வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இன்று மாலை முதல் நகரின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பதிவாகி வருகிறது. குறிப்பாக, மடிப்பாக்கம், ஆதபாக்கம், ஆலந்தூர், கிண்டி, மீனம்பாக்கம், பல்லாவரம், கிண்டி, சைதாப்பேட்டை, சின்னமலை, தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பதிவானது.

இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும்?


அடுத்த சில தினங்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது பதிவில், “ இன்று காலை முதல் சென்னையில் இருந்து டெல்டா வரையிலான கடலோர மாவட்டங்களிலும், பின்னர் ராமநாதபுரம்-தூத்துக்குடி-கன்னியாகுமரி கடலோர மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை முதல் மழை பெய்யும். வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், சென்னை, பாண்டி, கடலூர் முதல் ராமேஸ்வரம் வரையிலான கடலோர மாவட்டங்கள் அடுத்த இரண்டு நாட்களில் நல்ல மழை பதிவாகும்.

அடுத்த 2 நாட்களுக்கு – சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், பாண்டி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும், சில இடங்களில் கனமழை பெய்யும், சில இடங்களில் மிதமான மழை பெய்யும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலை காய்ச்சாமல் குடிப்பதால் ஏற்படும் பிரச்னைகள்!
காலிஃபிளவர் சாப்பிடுவது உடலுக்கு இவ்வளவு நன்மைகளை தருமா?
ஸ்மார்ட்போனில் நெட்வொர்க் வேகம் அதிகரிக்க இவற்றை பின்பற்றுங்கள்!
நடிகை அபர்ணா பாலமுரளியின் லேட்டஸ்ட் ஆல்பம்