Tamilnadu Weather Alert: வெளிய போறீங்களா? காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. கனமழை எச்சரிக்கை எங்கே? - Tamil News | tamilnadu weather alert october 6th 9 district to receive light rain for next three hours imd report in tamil | TV9 Tamil

Tamilnadu Weather Alert: வெளிய போறீங்களா? காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. கனமழை எச்சரிக்கை எங்கே?

Published: 

06 Oct 2024 07:07 AM

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

Tamilnadu Weather Alert: வெளிய போறீங்களா? காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. கனமழை எச்சரிக்கை எங்கே?

கோப்பு புகைப்படம்

Follow Us On

ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு தென் மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒரு சில பகுதிகளில் மட்டுமே லேசான மழை இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வட கிழக்கு பருவ மழை இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் வட தமிழகத்தில் நல்ல மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை எங்கே?

அதன்படி இன்று,  நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் பாஜகவுக்கு ஷாக்.. திரும்பி அடிக்கும் காங்கிரஸ்.. Exit poll சொல்வது என்ன?

வரும் அக்டோபர் 8 ஆம் தேதி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அதேபோல் வரும் 9 ஆம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 10 ஆம் தேதி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மேலும் படிக்க:  பிஎம் கிசான் திட்டம்.. உங்க அக்கவுண்டுக்கு ரூ.2000 வந்துதா? வரலனா இதை பண்ணுங்க

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தென் மாவட்டங்களில் மழை இருந்தாலும், ஒரு சில மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்த வண்ணமே உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 35.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

07.10.2024 முதல் 09.10.2024: லட்சத்தீவு பகுதிகளை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

07.10.2024 முதல் 09.10.2024: கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தூங்குவதற்கு முன் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள்
நாம் அதிகமாக சர்க்கரை எடுத்துக்கொள்வதற்கான அறிகுறிகள்..!
நெல்லிக்கனி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?
Exit mobile version