5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மீண்டும் படுத்தி எடுக்க போகுது வெப்பம்.. 3 நாட்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

Weather Update: ரிமல் புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு குறைவு என்றும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் மே 29ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும். மே 26ஆம் தேதிஅதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஒட்டி இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீண்டும் படுத்தி எடுக்க போகுது வெப்பம்.. 3 நாட்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம்!
வெயில் (கோப்புப் படம்)
umabarkavi-k
Umabarkavi K | Published: 26 May 2024 07:29 AM

வானிலை நிலவரம்: மே மாதம் கடும் கோடைகாலம் என்றாலும் இந்த முறை மழைகாலமாகவே இருக்கிறது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி அடுத்த சில நாட்களிலேயே மழையின் வரவு இருந்தது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக, தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 10 செ.மீ மழை பெய்ந்துள்ளது. தொடர்ந்து, தமிழ்நாட்டில் இன்று முதல் 31ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்திருக்கிறது. இதற்கு ரிமல் புயல் என பெயரிடப்பட்டுள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை புயலாக வலுப்பெறக்கூடும்.

அதன் பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து, நாளை (26.05.2024) காலை தீவிர புயலாக வலுப்பெற்று நாளை நள்ளிரவு வங்க தேச-கேப்புப்பாராவிற்கும் மேற்கு வங்காளம் சாகர் தீவிற்கும் இடையே கரையை கடக்கக்கூடும். புயல் கரையை கடக்கும் நேரம் தரைக்காற்று மணிக்கு 110-120 கி.மீ வேகத்திலும் இடை இடையே 135 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read: பூங்காவில் மின்சாரம் தாக்கி இரண்டு குழந்தைகள் பலி… கோவையில் ஏற்பட்ட சோகம்..!

வெப்பம் அதிகரிக்கும்:

இந்த புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு குறைவு என்றும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் மே 29ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும். மே 26ஆம் தேதிஅதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். மே 27 முதல் 29ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பாகவும் / இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38°-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39°-40° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29̊̊° -30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Also Read: கட்டிப்பிடி வைத்தியம்.. பிரச்னைக்கு காரணமான காவலரும், பேருந்து நடத்துனரும் ஆரத் தழுவி சமாதானம்!

Latest News