Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல்.. சென்னைக்கு மழை.. வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன முக்கிய தகவல்..
Rain Alert: நேற்று மாலை முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை பதிவாகி வருகிறது. இந்த புயல் தற்சமயம் 7 கி.மி வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு சுமார் 190 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் இன்று பிற்பகல் அல்லது மாலை சென்னை அருகே மாமல்லப்புரம் மற்றும் காரைக்கால் புதுவை அருகே கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கட்லில் உருவான ஃபெஞ்சல் புயலின் காரணமாக் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நேற்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் உருவானது. இதனை தொடர்ந்து நேற்று மாலை முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை பதிவாகி வருகிறது. இந்த புயல் தற்சமயம் 7 கி.மி வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு சுமார் 190 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் இன்று பிற்பகல் அல்லது மாலை சென்னை அருகே மாமல்லப்புரம் மற்றும் காரைக்கால் புதுவை அருகே கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கரையை கடக்கும் சமயத்தில் மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்திலும், சமயத்தில் 90 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.
தனியார் வானிலை ஆய்வாளர் சொல்வது என்ன?
First spin and the 1st bands falling over Chennai and super intense clouds are being picked by radar near the centre of cyclone in sea. This is just a start more bands will fall and rains with breaks will happen with varying intensity.
The cyclone might cross tomorrow between… pic.twitter.com/TQoEJpokgI
— Tamil Nadu Weatherman (@praddy06) November 29, 2024
இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று நாள் முழுவதும் காற்றுடன் கனமழை இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது பதிவில், “ அடர்ந்த மேகக்கூட்டங்கள் நகரை நோக்கி வருவதால், இன்று நாள் முழுவதும் காற்றுடன் கனமழை இருக்கும். புயல் சென்னை மற்றும் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்பதால் சென்னைக்கு நல்ல மழை இருக்கும். ஆனால் இந்த புயல் சென்னையின் மேற்கு பகுதி வழியாக கடந்தால் மட்டுமே சென்னை நகரம் முழுவதும் நல்ல மழை இருக்கும். இன்று நாள் முழுவதும் சென்னை மட்டுமல்லாமல், புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: சென்னைக்கு 190 கி.மீ தொலைவில் இருக்கும் ஃபெஞ்சல் புயல்.. விடிய விடிய ஆட்டம் காட்டும் மழை..
எத்தனை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்:
இன்று, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஃபெஞ்சல் புயல் எதிரொலி.. இன்று எத்தனை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
நாளை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.