5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TN Weather Report: சில்லென மாறிய சென்னை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும்?

Chennai Rain: சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் வட தமிழ்நாடு பகுதியிலும் இன்றும் நல்ல மழை இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

TN Weather Report: சில்லென மாறிய சென்னை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும்?
சென்னையில் மழை
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 19 Jun 2024 16:18 PM

சென்னையில் மழை: சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது. அந்த வகையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24°-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு ஆலந்தூர், மடிப்பாக்கம், மேடவாக்கம், வேளச்சேரி, அடையாறு, திருவான்மியூர், ஆதம்பாக்கம், சின்னமலை, ராஜாஜி சாலை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பதிவானது. இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலை பிற்பகல் மூதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனை தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, அண்னாசாலை, மடிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் வட தமிழ்நாடு பகுதியிலும் இன்றும் நல்ல மழை இருக்கும் என தெரிவித்துளார். ஜூன் மாதம் முடிய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இந்த மழை தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் ஜூன் 23 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதாவது 23 ஆம் தேதி 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Also Read: சென்னை மக்களுக்கு சூப்பர் நியூஸ்..! 3 மெட்ரோ ரயில் நிலையம் அருகே வரப்போகும் லூலு மால்.. எங்கே தெரியுமா?

Latest News