5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Weather Alert: சென்னையில் கனமழை.. 3 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Tamilnadu Weather Alert: சென்னையில் கனமழை.. 3 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 12 Oct 2024 07:22 AM
தென்தமிழகம் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக் கூடும்.  திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க வட தமிழகம் சற்று வறண்டு காணப்படுகிறது. வெயிலின் தாக்கமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் இந்த நிலை விரைவில் அதவாது இன்னும் ஓரிரு நாட்களில் மாறும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரது முகநூல் பக்கத்தில், வட கிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாக வரும் அக்டோபர் 14 முதல் 17 ஆம் தேதி வரை வட தமிழகத்தில் குறிப்பாக சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், இந்த நாட்களில் வங்கக் கடலில் கற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அது வட தமிழகம் முதல் ஆந்திரா நோக்கி நகரும் என்றும் இந்த நகர்வு மெதுவாக இருந்தால் வட தமிழ்நாட்டில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வட கிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்னாள், வட தமிழகத்திற்கு கிடைக்கும் முதல் மழை என்றும் 2014 ஆம் ஆண்டிற்கு பின் இருக்கப்போகும் நல்ல மழை என்றும் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேராக ஆந்திரா பகுதியில் உருவாகினால் வட தமிழ்நாட்டிற்கு மழை இருக்காது எனவும், இதற்கான வாய்ப்பு என்பது 20% மட்டுமே எனவும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் வட கிழக்கு பருவ மழை அக்டோபர் 14 ஆம் தேதி வாக்கில் தொடங்கும் என்றும் தெரிட்வித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் இன்று அதிகாலை முதல் நகரின் ஒரு சில பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது. ராயப்பேட்டை, மணலி, புழல், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது.

கனமழை எச்சரிக்கை எங்கே?

நாளை, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள்,  நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை மறுநாள், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில்  ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் 15 ஆம் தேதி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில்  ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Latest News