Tamilnadu Weather Alert: இனி வெப்பநிலை படிப்படியாக குறையும்.. 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எங்கே? - Tamil News | tamilnadu weather update 28 sep 19 disctricts with heavy rainfall warning imd report in tamil | TV9 Tamil

Tamilnadu Weather Alert: இனி வெப்பநிலை படிப்படியாக குறையும்.. 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எங்கே?

Published: 

28 Sep 2024 07:43 AM

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamilnadu Weather Alert: இனி வெப்பநிலை படிப்படியாக குறையும்.. 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எங்கே?

கோப்பு புகைப்படம்

Follow Us On

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பநிலை பதிவான நிலையில் தற்போது ஆங்காங்கே மழை பதிவாகி வருகிறது. மதுரை, சிவகங்கை, திருச்சி, பாளயங்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவானது. அதனை தணிக்கும் வகையில் இரண்டு தினங்களுக்கு முன் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பலத்த காற்றுடன் நல்ல மழை பதிவானது. அந்த வகையில் இன்று காலை 10 மணி வரை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இத்துடன், தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான், அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில், வெப்பநிலை கணிசமாக குறையும் என தெரிவித்துள்ளார்.


மேலும், அதிகப்படியான வெப்பநிலை போலவே மழையும் இருக்கும் என்றும், வட தமிழகம் மட்டுமல்லாமல் மதுரை, சிவகங்கை, திருச்சி போன்ற தென் தமிழகத்திலும் நல்ல மழை இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு படி, உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: தொலைந்து போன பைக் கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10 ஆயிரம் சன்மானம்.. கண்கலங்கி நிற்கும் மாநகராட்சி ஊழியர்..

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

30.09.2024 வரை: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

28.09.2024: தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

29.09.2024 மற்றும் 30.09.2024: தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

01.10.2024: தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related Stories
Tamilnadu Weather Alert: திருச்சியில் 11 செ.மீ மழை பதிவு.. இன்றும் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
கடந்த 10 மாதத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் – விழிப்புணர்வு மாரத்தானில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..
TN Cabinet Reshuffle: செந்தில் பாலாஜி உட்பட நான்கு அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யாருக்கு எந்த துறை?
Tamilnadu Cabinet Reshuffle: இளைஞரணி செயலாளர் டூ துணை முதலமைச்சர்.. அமைச்சர் உதயநிதியின் அரசியல் பயணம்..
TN Ministers: 3 அமைச்சர்கள் நீக்கம்.. 2 பேருக்கு வாய்ப்பு.. முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!
CM Stalin: திமுக கூட்டணியில் பிளவா? பவள விழா பொதுக் கூட்டத்தில் போட்டு உடைத்த முதல்வர் ஸ்டாலின்!
ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஆலிவ் ஆயிலின் நன்மைகள்..!
சருமத்திற்கு பல நன்மைகளை தரும் கற்றாழை..!
புதினாவை தினமும் மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்
Exit mobile version