School Leave: வெளுத்து வாங்கும் கனமழை.. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்களில்? - Tamil News | | TV9 Tamil

School Leave: வெளுத்து வாங்கும் கனமழை.. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்களில்?

Updated On: 

01 Jul 2024 07:26 AM

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுக்கா பகுதிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்துள்ளார்.

School Leave: வெளுத்து வாங்கும் கனமழை.. பள்ளிகளுக்கு  இன்று விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்களில்?

கோப்புப்படம்

Follow Us On

பள்ளிகளுக்கு விடுமுறை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுக்கா பகுதிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்துள்ளார். மே 31 ஆம் தேதி கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியது. தென் மேற்கு பருவமழை என்பதால் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read: நாடு முதல் உலகம் வரை.. இன்றைய முக்கியச் செய்திகள் இதோ!

வானிலை நிலவரம்:

ஜூலை 2 முதல் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் அடுத்த ஐந்து தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில், 2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு  சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 28°-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

இன்று முதல் 04.07.2024 வரை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

இன்று முதல் 03.07.2024 வரை: வடக்கு ஆந்திரகடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்கிழக்கு, மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

04.07.2024: தென்கிழக்கு, மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

30.06.2024 முதல் 04.07.2024 வரை: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Also Read: குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை.. வணிக பயன்பாடு LPG விலை நிலவரம் இதோ!

 

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version