Tamilnadu Weather Update: 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?
School Holiday: தமிநாட்டில் இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வால்பாறை பகுதி பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். அதேபோல் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுக்கா பகுதிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்துள்ளார். மே 31 ஆம் தேதி கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியது. தென் மேற்கு பருவமழை என்பதால் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது.
பள்ளி விடுமுறை:தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிநாட்டில் இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வால்பாறை பகுதி பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். அதேபோல் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுக்கா பகுதிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்துள்ளார். மே 31 ஆம் தேதி கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியது. தென் மேற்கு பருவமழை என்பதால் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது.
நேற்று இரவு சென்னையில், பல்வேறு இடங்களில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டியது. அதன்படி, போரூர், வளசரவாக்கம், ஆவடி, அம்பத்தூர், நுங்கம்பாக்கம், எழும்பூர், வடபழனி, பூந்தமல்லி, ஐயப்பன் தாங்கல், குன்றத்தூர், ஆலப்பாக்கம், கொராட்டூர், அயப்பாக்கம், கோடம்பாக்கம், வானகரம், நெற்குன்றம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பதிவாகியுள்ளது. அதேபோல் இன்று காலை முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
Also Read: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக இன்று இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36°-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Also Read: இனி மதுரை டூ பெங்களூரு ஈசியாக பயணிக்கலாம்.. இன்று முதல் வந்தே பாரத் ரயில் இயக்கம்..!