5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Rain Alert: ரெடியா இருங்க மக்களே.. இன்னைக்கு இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

Weather Update: பொதுவாக தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகிய இரண்டும்தான் மழையை கொடுக்கும். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்க்கும் நிலையில், அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவமழை பெய்யும்.

Rain Alert: ரெடியா இருங்க மக்களே.. இன்னைக்கு இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!
மழை Image Credit source: Pexels
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 18 Dec 2024 09:50 AM

கனமழைக்கு வாய்ப்பு: வங்கக்கடலில் உருவாக்கியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நகர தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு முடியவுள்ள நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மூன்று வாரங்களாக தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்கக்கடலில் உருவான வளிமண்டல சுழற்சியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறியுள்ளது. இது வட தமிழக கடலோர பகுதியை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நகர தொடங்கியுள்ளதால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் மஞ்சள் லாட்டரி விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் சில இடங்களில் நேற்று இரவே சாரல் மழை பெய்த நிலையில் இன்றும் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன. இதனால் சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் சென்று வருகிறது.

Also Read: TN Education: 10ஆம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் இல்லையா? தமிழக அரசின் நிலை என்ன?

பொதுவாக தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகிய இரண்டும்தான் மழையை கொடுக்கும். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்க்கும் நிலையில், அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். இந்த வடகிழக்கு பருவ மழையால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் அதிகமான மழைப்பொழிவை பெறும். அந்த வகையில் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.

குறிப்பாக நவம்பர் மாதம் கடைசியில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக வடமாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, சேலம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மழையின் அளவு இயல்பை விட 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மழையின் அளவு கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read: Tiruvallur: வீட்டுல விருந்து.. 19 காகங்களை கொன்ற தம்பதி.. திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்!

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடலின் வட பகுதிகள், தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் ஆகியவற்றில் இன்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் மேகமூட்டமாக உள்ள நிலையில் இரவு வேளைகளில் அதிகப்படியான பனி நிலவுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சாலைகளில் குளிர்ந்த காற்று வீசி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News