5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Weather Update: கனமழையால் தூத்துக்குடியில் வெள்ளம்.. அடுத்த 7 நாட்கள்! தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?

Rain Updates: தமிழ்நாட்டில் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை எச்சரிக்கை மற்றும் முன்னறிவிப்பு பற்றி இங்கே தெரிந்து கொள்வோம். தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை சுற்றிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல், வளிமண்டல  கீழடுக்கு சுழற்சியானது தற்போது நிலவுகிறது.

Tamilnadu Weather Update: கனமழையால் தூத்துக்குடியில் வெள்ளம்.. அடுத்த 7 நாட்கள்! தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?
கனமழை (Image: PTI)
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 15 Dec 2024 18:07 PM

தென் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. அதேநேரத்தில், சென்னை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையும், ஆங்காங்கே மேக மூட்டமும் தென்படுகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டில் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை எச்சரிக்கை மற்றும் முன்னறிவிப்பு பற்றி இங்கே தெரிந்து கொள்வோம். தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை சுற்றிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல், வளிமண்டல  கீழடுக்கு சுழற்சியானது தற்போது நிலவுகிறது.

இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்குள் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, இது வலுப்பெறுவதுடன் மேற்கு – வட மேற்கு திசைகளில் அதாவது தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி அடுத்த இரு தினங்களில் நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக இனிவரும் நாட்களில் எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றே விவரம் இங்கே..

ALSO READ: திமுக, பாஜகவிற்கு கண்டனம்.. அதிமுக செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

அடுத்த ஏழு நாட்கள் எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு..?

நாளை மற்றும் நாளை மறுதினம் எங்கெல்லாம் மழை..?

தமிழ்நாட்டில் நாளை ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. தொடர்ந்து, டிசம்பர் 17ம் தேதியான நாளை மறுநாள் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் அநேக  இடங்களிலும், உள் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான முதல் மிதமான மழையை எதிர்பார்க்கலாம்.

அதே டிசம்பர் 17ம் தேதியில் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையையும் எதிர்பார்க்கலாம். அதேபோல் பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழையை எதிர்பார்க்கலாம்.

டிசம்பர் 18ம் தேதி எங்கெல்லாம் மழை..?

தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும், இடி மர்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.  மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, சென்னை, திருவள்ளூர், திருவாரூர்,  திருவண்ணாமலை, ராணிபேட்டை, நாகப்பட்டினம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ALSO READ: Erode East By Election: 2 ஆண்டுகளில் 2வது முறை இடைத்தேர்தல்.. கவனம் ஈர்க்கும் ஈரோடு கிழக்கு தொகுதி!

டிசம்பர் 19, 20,21 ம் தேதிகளில் எங்கெல்லாம் மழை..?

19.12.2024:

தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழையை எதிர்பார்க்கலாம். அதேபோல் காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

20.12.2024:

தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை  பெய்யலாம். 21.12.2024: துச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புலேசானது முதல் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

தூத்துக்குடியில் சூழ்ந்த வெள்ளநீர்:

கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது வங்க கடலில் நீடித்து வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தூத்துக்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடியில் அதிகபட்சமாக விமான நிலைய பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை சுமார் 21.செ.மீ மழை பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தூத்துக்குடியில் செம்மரிகுளம், பக்கிள் கால்வாய் மற்றும் ஆற்றின் கரையோர பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Latest News