Cyclone Rimal : உருவாகும் ரிமல் புயல்.. வெளுக்கப்போகும் மழை.. தமிழ்நாடு நிலைமை என்ன?
Cyclone Update : நேற்று காலை முதலே கொல்கத்தாவில் கனமழை பெய்து வருகிறது. இதோ, குஜராத், ஒடிசா மாநிலத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 26ஆம் தேதி வரை மத்திய மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக் கடலில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மழை : மே மாதம் கடும் கோடைகாலம் என்றாலும் இந்த முறை மழைகாலமாகவே இருக்கிறது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி அடுத்த சில நாட்களிலேயே மழையின் வரவு இருந்தது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக கேரளா எல்லை மாவட்டங்களில் கனமழை பெய்தது. மற்ற மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் குறைந்தது. இந்நிலையில் வங்கக் கடலில் புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளது என்றும் அதற்கு ரிமல் என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக் கடலில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும். வடக்கு வங்காள விரிகுடாவை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு 50-60 வேகத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும். மே 24ஆம் தேதி காலையில் மணிக்கு 70 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் இன்று முதல் 26 ஆம் தேதி வரை மத்திய மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Also Read : திடீரென வெடித்து சிதறிய பாய்லர்.. அலறிய தொழிலாளர்கள்.. 4 பேர் பலியான சோகம்!
ரிமல் புயல்:
ரிமல் புயல் நாளை மே 25ம் தேதி வங்கக் கடலில் உருவாக உள்ளது. நேற்று முன்தினம் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 08:30 மணி அளவில் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று (24.05.2024) காலை மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து , புயலாக வலுப்பெற்று, 25.05.2024 காலை மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.
அதன் பிறகு, இது, வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்று, வங்க தேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்குவங்காள கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நேற்று காலை முதலே கொல்கத்தாவில் கனமழை பெய்து வருகிறது. இதோ, குஜராத், ஒடிசா மாநிலத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 26ஆம் தேதி வரை மத்திய மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக் கடலில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த ரிமல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் மழை அதிகமாக இருக்கமா என்ற தகவல் எதுவும் இல்லை. இருப்பினும், மே 26ஆம் தேதி வரை ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : நெல்லை காங்கிரஸ் தலைவர் மரண வழக்கு.. சிபிசிஐடிக்கு மாற்றம்!