Fengal Cyclone: சென்னைக்கு அருகே கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்? 29, 30 ஆகிய தேதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்பு..
இன்றும் நாளையும் சென்னையில் மிதமான மழையும், 29 ஆம் தேதி கனமழையும், 30 ஆம் தேதி அதிகனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதி மிதமான மழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் கொங்கு மண்டலத்திலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் வட கிழக்கு பருவ மழை தொடங்கியது. வட கிழக்கு பருவ மழை தொடங்கியது முதல் வங்கக்கடலில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவான நிலையில், அது புயலாக வலுப்பெறாமல் கரையை கடந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் ஃபெங்கல் என்ற புயல் உருவாக்ககூடும் என்றும், இது அதி தீவிர சூறாவளி புயலாக வலுப்பெறக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இலங்கை – திரிகோணமலையிலிருந்து கிழக்கு- தென்கிழக்கே சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 370 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தென்கிழக்கே 470 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
சென்னைக்கு அருகே கரையை கடக்கும் புயல்?
The Depression / Cyclone may cross the coast between Parangipettai, Cuddalore and Chennai around 30th November.
Chennai region will get heavy rains on 29 and 30th November. Since it is crossing south of Chennai ideal rains for chennai catchment. A tentative view on our rains.…
— Tamil Nadu Weatherman (@praddy06) November 27, 2024
இது வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக்கூடும் என்றும் அதன் பிறகு, மேலும் வடக்கு – வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் வரும் 30 ஆம் தேதி பரங்கிபேட்டை, சென்னை மற்றும் கடலூர் இடையே கரையை கடக்கக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், “ வங்கக்கடலில் உருவாகும் ஃபெங்கல் புயல் வரும் 30 ஆம் தேதி சென்னை, பரங்கிப்பேட்டை மற்றும் கடலூர் இடையே கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக சென்னையில் நாளை மறுநாள் மற்றும் 30 ஆம் தேதி அதி கனமழை பெய்யக்கூடும்.
இன்றும் நாளையும் சென்னையில் மிதமான மழையும், 29 ஆம் தேதி கனமழையும், 30 ஆம் தேதி அதிகனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதி மிதமான மழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் கொங்கு மண்டலத்திலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்படுள்ளது.
எத்தனை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்?
இதன் காரணமாக இன்று, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 29 ஆம் தேதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: வங்கக்கடலில் உருவாகும் ஃபெங்கல் புயல்.. டிசம்பர் 1 ஆம் தேதி வரை வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
வரும் 30 ஆம் தேதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.