5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Party Conference Live: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு.. காலை முதல் குவியும் தொண்டர்கள்..

Vijay's Tamizhaga Vetri Kazhagam: தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு இன்று மாலை விக்கிரவாண்டியில் இருக்கும் வி.சாலையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கடந்த மாதம் முதல் மேற்கொள்ளப்படு வருகிறது. இந்த மாநாட்டால் வி.சாலையே விழா கோலம் பூண்டுள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் மொத்த அரசியல் களமும் விஜய்யின் மாநாட்டை நோக்கி திரும்பியுள்ளது.

aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 27 Oct 2024 07:07 AM
TVK Party Conference Live: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு.. காலை முதல் குவியும் தொண்டர்கள்..
தமிழக வெற்றிக் கழகம்

LIVE NEWS & UPDATES

  • 27 Oct 2024 08:43 AM (IST)

    மாநாடு ஏற்பாடுகளை பார்வையிட்ட தலைவர் விஜய்..

    இன்று மாலை தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் நேற்று இரவு கேரவாணில் வந்து கட்சி தலைவர் விஜய் நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

  • 27 Oct 2024 07:51 AM (IST)

    விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இன்று கட்டணம் இல்லை என அறிவிப்பு..

    தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று மாலை நடைபெற இருக்கும் நிலையில், இன்று காலை 10 மணி முதல் மாநாட்டிற்கு செல்லும் வாகனங்களுக்கு விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்தியேகமாக 2 பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளது..

  • 27 Oct 2024 07:19 AM (IST)

    தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு.. விக்கிரவாண்டியில் போக்குவரத்து மாற்றம்..

    தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் இன்று அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது சென்னை முதல் திருச்சி செல்லும் பேருந்துகள் செஞ்சி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. அதேபோல் கனரக வாகனங்கள் திண்டிவனம், வில்லியனூர் வழியாக விழுப்புரம் செல்லலாம். கார்கள் பொருத்தவரை, திண்டிவனத்தில் இருந்து மயிம், பெரும்பாக்கம் வழியாக செல்ல அனுமதிக்கப்படுகிறது.

  • 27 Oct 2024 07:13 AM (IST)

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு.. விழாக்கோலம் பூண்ட வி.சாலை..

    நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் இருக்கும் வி. சாலையில் மாலை நடைபெற உள்ளது. முதல் மாநாடுக்கான ஏற்பாடுகள் மிகவும் பிரம்மாண்டமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதனால் வி.சாலையே விழாக்கோலம் பூண்டுள்ளது.

மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று மாலை விக்கிரவாண்டியில் இருக்கும் வி. சாலையில் நடைபெற உள்ளது. இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் கடந்த மாதம் முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1000 எல்.ஈ.டி விளக்குகள், 700 சிசிடிவி கேமிராக்கள், மாநாட்டிற்கு வருகை தரும் மக்களுக்கான் பாதுகாப்பு ஏற்பாடுகள், உணவு வழங்குவது போன்ற அனைத்தும் முறையே செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசியல் களத்தின் மொத்த கவனமும் இந்த மாநாடு ஈர்த்துள்ளது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. பிற அரசியல் கட்சி தலைவர்கள் விஜய்யின் முதல் மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிக் கொடி அறிமுகப்படுத்திய நிலை, கட்சியின் கொள்கை கோட்பாடுகள் என்ன என்பது குறித்து தற்போது வரை எந்த தகவலும் இல்லை. அந்த வகையில் கட்சி மாநாட்டில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் என பல பெருந்ததலைவர்களில் கட் அவுட் இடம்பெற்றுள்ளது. மேலும் இன்று நடைபெற இருக்கும் மாநாட்டில் கட்சி தலைவர் விஜய் கட்சியின் கொள்கைகள் குறித்து பேசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Latest Stories