5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Actor Vijay : நீட் தேர்வுக்கு இதுதான் தீர்வு.. மாணவர்கள் விழாவில் யோசனை சொன்ன நடிகர் விஜய்!

Tamilaga Vettri Kazhagam : ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்றவாறு பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும். மாநில உரிமைக்காக மட்டுமல்ல கல்வி முறையில் பல்வேறு கண்ணோட்டங்கள் பார்வைகள் இருக்கிறது. அதுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நிச்சயமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய பார்வை. பன்முகத் தன்மை என்பது பலமே தவிர பலவீனம் அல்ல என த.வெ.க தலைவர் விஜய் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்துக்கொண்டு பேசினார்.

Actor Vijay : நீட் தேர்வுக்கு இதுதான் தீர்வு.. மாணவர்கள் விழாவில் யோசனை சொன்ன நடிகர் விஜய்!
மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 03 Jul 2024 11:52 AM

த.வெ.க தலைவர் விஜய்: 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை நடிகர் மற்றும் த.வெ.க தலைவர் விஜய் இன்று 2 ஆம் கட்டமாக சந்தித்து உதவித்தொகை வழங்கி வருகிறார்.அப்போது பேசிய அவர், “நீட் தேர்வு தமிழ்நாட்டில் மாணவ மாணவிகள் குறிப்பா கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த இந்த மாணவ மாணவிகளை மிகவும் பாதிக்கிறது என்பது உண்மை .நீட் பற்றி மூன்று பிரச்சனையாக நான் பார்பது, நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிராக உள்ளது. 1975 ஆம் ஆண்டுக்கு முன்னாள் வரை கல்வி மாநில பட்டியலில் இருந்தது. ஒன்றிய அரசு வந்த பிறகு பொது பட்டியலில் அதை சேர்த்தார்கள். அதுதான் முதல் பிரச்சனை” என தெரிவித்துள்ளார்.

2ம் கட்டமாக இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை வழங்குகிறார்.

அப்போது கலந்துக்கொண்டு நிகழ்ச்சியில் பேசிய அவர், “ நீட் பற்றி மூன்று பிரச்சனையாக நான் பார்பது, நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிராக உள்ளது. 1975 ஆம் ஆண்டுக்கு முன்னாள் வரை கல்வி மாநில பட்டியலில் இருந்தது. ஒன்றிய அரசு வந்த பிறகு பொது பட்டியலில் அதை சேர்த்தார்கள். அதுதான் முதல் பிரச்சனை. இரண்டாவதாக ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் என்பது கல்வி கற்கும் நோக்கத்திற்கு எதிரான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்றவாறு பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும். மாநில உரிமைக்காக மட்டுமல்ல கல்வி முறையில் பல்வேறு கண்ணோட்டங்கள் பார்வைகள் இருக்கிறது. அதுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நிச்சயமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய பார்வை. பன்முகத் தன்மை என்பது பலமே தவிர பலவீனம் அல்ல.

மாநில மொழியில் படித்துவிட்டு ஸ்டேட் சிலபஸில் படித்துவிட்டு மற்ற சிலபஸில் தேர்வு வைத்தால் எப்படி, அதுவும் கிராமபுரத்தில் இருக்கக்கூடிய மாணவ மாணவிகள் மருத்துவ படிப்பிற்கு எவ்வளவு கடினமானதாக இருக்கும். கடந்த முறை நடந்த நீட் தேர்வில் குளறுபடி நடந்தது குறித்து செய்திகள் வந்தது. நீட் தேர்வு மேல நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் போய்விட்டது. நாடு முழுவதும் நீட் தேர்வை தேவை இல்லை என்பதை தான் நாம் இதில் புரிந்து கொள்ள வேண்டியது.

நீட் விளக்கு தான் இதற்கு உடனடி தீர்வு. நீட் ரத்து கோரி தமிழக சட்டமன்றம் கொண்டு வந்த தீர்மானத்தை நான் வரவேற்கிறேன். ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல் தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து விரைவாக இதை தீர்க்க வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு தான் என்ன ? கல்வி பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். ஒருவேளை அதில் ஏதாவது சிக்கல் இருந்தால் இடைக்கால தீர்வாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி ஒரு சிறப்பு தீர்மானத்தை கொண்டு வர வேண்டும்.

சிறப்பு பொது பட்டியல் உருவாக்கி அதில் கல்வி சுகாதாரத்தை சேர்க்க வேண்டும். பொது பட்டியலில் உள்ள பிரச்சனை துறைகளில் மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும் முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். ஒன்றிய அரசு அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய மருத்துவக் கல்லூரிகளான எய்ம்ஸ் ஜிம்மர் போன்ற நிறுவனங்களுக்கு வேண்டுமானால் நீட் தேர்வை நடத்திக் கொள்ளலாம். இங்கே உள்ள பிரச்சனை என்னவென்றால் என்னுடைய கருத்தாக இதை நான் கூறுகிறேன்.

ஜாலியாக படியுங்கள் ஸ்ட்ரெஸ் எடுத்துக் கொள்ள வேண்டாம், உலகம் மிகப் பெரியது அவ்வளவு வாய்ப்புகள் உள்ளது. மாணவர்கள் ஜாலியாக படிக்க வேண்டும் வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம் மீண்டும் சந்திக்கும் வரை நன்றி” என குறிப்பிட்டு பேசியுள்ளார்.

Also Read: ஹத்ராஸ் விபத்து.. காவல் துறையில் வேலை.. பின் கடவுளின் சேவகர்.. யார் இந்த போலே பாபா?