TVK Vijay Maanadu: ரெடியா தோழர்களே… விஜய்யின் முதல் மாநாடு.. தேதி குறித்த த.வெ.க தொண்டர்கள்
த.வெ.க மாநாடு: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அக்டோபர் 15ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறும் என்று சுவர் விளம்பரங்களில் எழுதப்பட்டுள்ளது. இருப்பினும், மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ தேதியை கட்சி தலைவர் விஜய் இதுவரை அறிவிக்கவில்லை
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அக்டோபர் 15ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறும் என்று சுவர் விளம்பரங்களில் எழுதப்பட்டுள்ளது. இருப்பினும், மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ தேதியை கட்சி தலைவர் விஜய் இதுவரை அறிவிக்கவில்லை. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து தற்போது அரசியல் தலைவராக அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய். கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை குறித்து வைத்து தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கி இருக்கிறார். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு சமூக பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
அக்டோபர் 15ல் மாநாடு?
மேலும், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தனது ஒவ்வொரு நகர்வையும் எடுத்து வருகிறார். அந்த வகையில் விஜய் சமீபத்தில் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். இந்த கொடி மிகப்பெரிய அளவில் விமர்சனங்களை பெற்றது. இதற்கு அடுத்தபடியாக கட்சிக்கான முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலை என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டு, கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி காவல்துறையிடம் அனுமதி கோரி மனுவும் கொடுக்கப்பட்டிருந்தது.
Also Read: “ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு – எங்கள் கொள்கை” – முதலமைச்சரை சந்தித்த பின் பேசிய திருமாவளவன்..
இதையடுத்து, காவல்துறையினரும் த.வெ.க மாநாடு நடத்துவது தொடர்பாக மொத்தம் 21 கேள்விகள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாநாட்டில் 50,000 இருக்கைகள் போடப்பட உள்ளதாகவும், 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மாநாடு நடைபெறுவதாகவும், மாலை 6 மணியில் இருந்து விஜய் பேசும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து நிபந்தனைகளுடன் மாநாட்டுக்கும் காவல்துறை அனுமதி வழங்கியதாக தெரிகிறது. ஆனால், மாநாடு தேதி குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேசமயம் மாநாட்டுக்கான பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.
போஸ்டர் ஒட்டிய தொண்டர்கள்:
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அக்டோபர் 15ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறும் என்று சுவர் விளம்பரங்களில் எழுதப்பட்டுள்ளது. இருப்பினும், மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ தேதியை கட்சி தலைவர் விஜய் இதுவரை அறிவிக்கவில்லை. அனைவரும் எதிர்பார்க்கப்படும் இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் குறித்தும் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அதை விஜய் வாசிப்பார் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் ஏற்கனவே திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனைப்போட்டி நிலவிக் கொண்டிருக்கும் சூழலில், விஜய்யின் அரசியல் நுழைவு பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
விஜய் கட்சியுடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சிமான் கூட்டணி வைக்கப்போவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிப்பட்டது. ஆனால் சீமான் விஜய் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும் தனித்து போட்டியிடுவதாக திட்டவட்டமாக கூறியிருக்கிறார். இதன் மூலம் விஜய் கூட்டணியில் யார் யார் இருப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Also Read: சுட்டெரிக்கும் சூரியன்.. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பநிலை.. வானிலை சொல்வது என்ன?
மாநாட்டுக்கான நிபந்தனைகள்:
மாநாட்டிற்கு வரும் அனைவருக்கும் குடிநீர், உணவு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், மாநாட்டிற்கு செல்லும் வழிகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் சமமான சாலையை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர். மேலும், பார்க்கிங் இடத்திற்கும் மேடை மாநாடு இடத்திற்கும் இடையே தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். கர்ப்ப்ணி பெண்கள் முதியோர்களுக்கு தனி இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.