5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சென்னை விரையும் விக்கிரவாண்டி விவசாயிகள்.. சூப்பர் விருந்தளிக்கும் விஜய்.. இதுதான் காரணமா?

TVK Vijay : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுககு அக்கட்சி தலைவர் இன்று விருந்து அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக கட்சி அலுவலகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சென்னை விரையும் விக்கிரவாண்டி விவசாயிகள்.. சூப்பர் விருந்தளிக்கும் விஜய்.. இதுதான் காரணமா?
த.வெ.க விஜய்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 23 Nov 2024 10:31 AM

தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுககு அக்கட்சி தலைவர் இன்று விருந்து அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக கட்சி அலுவலகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகராக இருக்கும் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். 2026 சட்டப்பேரவை தேர்தலை நோக்கி விஜய் அரசியல் களத்தில் குதித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை தன்னுடைய இலக்காக கொண்டு விஜய் செயல்பட்டு வருகிறார்.

விவசாயிகளுக்கு விருந்து வைக்கும் விஜய்

கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்தார். சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்  நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட்டது.

அடுத்த சில நாட்களில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ஒரு மாதமாக அதற்கான பணிகள் நடைபெற்ற நிலையில் கிட்டதட்ட 8 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்த மாநாட்டில் விஜய்யின் முதல் அரசியல் பேச்சு மிகப்பெரிய அளவில் எதிர்ப்பலைகளை பெற்றது.

Also Read : வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட்!

காரணம் இதுதானா?

குறிப்பாக பெயர் குறிப்பிடாமல் பாஜக மற்றும் திமுகவை தனது கொள்ளை ரீதியாகவும்,  அரசியல் ரீதியாகவும் எதிரி என வெளிப்படையாகவே அறிவித்தார் விஜய். இந்த மாநாட்டிற்காக விக்கரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் சுமார் 170 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

இதில் பல்வேறு விவசாயிகள், நில உரிமையாளர்களின் நிலங்களும் அடங்கும். இதனை ஒப்பந்த அடிப்படையில் மாநாட்டிற்காக வாங்கி பயன்படுத்திவிட்டு மீண்டும் விவசாய பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் ஏற்பாடு செய்து கொடுப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் அடிப்படையிலேயே, மாநாடு முடிந்ததும் அவர்களின் நிலத்தை த.வெ.க கட்சி ஒப்படைத்தது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுககு அக்கட்சி தலைவர் இன்று விருந்து அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக கட்சி அலுவலகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விருந்தில் நில உரிமையாளர்கள், விவசாயிகள் அவர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

Also Read : நீங்க சங்கியா? ரஜினியுடன் என்ன பேசீனிங்க? சீமான் பதில்!

தயாராகும் மாவட்ட செயலாளர்கள் பட்டியல்

தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டிற்கு நிலம் வழங்கி உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விருதை அக்கட்சி தலைவர் விஜய் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த விருந்து சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதற்காக விக்கிரவாண்டியில் உள்ள விவசாயிகள்  புறப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. மாநாடு முடிந்ததை அடுத்து, கட்சியை சட்டசபைத் தேர்தலுக்குள் அனைத்து மட்டத்திலும் வலுப்படுத்த தயாராகி வருகிறார். அவரது கட்சியில் பெரும்பாலும் ரசிகர்கள் மன்றத்தினர் தான் உள்ளனர்.

புதிய உறுப்பினர் சேர்க்கையும் தீவிரமாக நடந்து வருகிறது.  முதற்கட்டமாக மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக 100 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அவர்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டியல் டிசம்பர் மாத வெளியாகும் என முதலில் செய்தி வெளியானது.

இப்போது ஜனவரி முதல் வாரத்தில் அந்த பட்டியல் வெளியிடப்படும் என்று கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. கட்சியை சேர்ந்த ஒன்றிய, பகுதி, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், அணி தலைவர்களிடம் கருத்து கேட்டு செயலாளர்களை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Latest News