5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தேதி குறித்த விஜய்.. த.வெ.க நிர்வாகிகளுக்கு போட்ட அதிரடி உத்தரவு!

TVK Vijay: மே 28ஆம் தேதி உலக பட்டினம் தினம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அனைவருக்கும் உணவு கிடைத்திடும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநில முழுவதும் மக்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட, அணி, நகரம், ஒன்றியம், கிளை, மற்றும் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளைப் பின்பற்றிப் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி, மக்கள் நலப்பணியில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தேதி குறித்த விஜய்.. த.வெ.க நிர்வாகிகளுக்கு போட்ட அதிரடி உத்தரவு!
விஜய்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 26 May 2024 10:24 AM

த.வெ.க நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவு: தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி, தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்து இருந்தார். மேலும், தேர்தல் ஆணையத்திலும் தனது கட்சியை பதிவு செய்துள்ள விஜய் வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தனக்கு இலக்கு என்றும், இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் இடைப்பட்ட இந்த இரண்டு வருடங்களில் கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் ஈடுபடப்போவதாகவும், இரண்டு கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் விஜய்.


இந்த நிலையில், மே 28ஆம் தேதி உலக பட்டினம் தினம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அனைவருக்கும் உணவு கிடைத்திடும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநில முழுவதும் மக்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி உத்தரவிட்டுள்ளார்.

Also Read: மீண்டும் படுத்தி எடுக்க போகுது வெப்பம்.. 3 நாட்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

அறிவிப்பில் இருப்பது என்ன?

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும், அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உலகப் பட்டினி தினமான, வருகிற 28.05.2024 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

மாவட்ட, அணி, நகரம், ஒன்றியம், கிளை, மற்றும் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளைப் பின்பற்றிப் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி, மக்கள் நலப்பணியில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அடுத்த மாதம் 22ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் விஜய். இதனையொட்டி, மதுரையில் தனது கட்சி சார்பில் முதல் பிரம்மாணடமான மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் இம்மாநாட்டில் கடந்த ஆண்டைப் போலவே தமிழகம் முழுவதும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகைகளை வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Also Read: கட்டிப்பிடி வைத்தியம்.. பிரச்னைக்கு காரணமான காவலரும், பேருந்து நடத்துனரும் ஆரத் தழுவி சமாதானம்!

Latest News