பெட்ரோலுடன் கலந்த தண்ணீர்.. வாகனங்கள் பழுதானதால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்..
நீண்ட காலமாகவே பெட்ரோலில் கலப்படம் செய்யப்படுகிறது, தரமான பெட்ரோல் வழங்கப்படுவதில்லை என்ற புகார் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனால் வாகனங்கள் எளிதில் பழுதாகி விடுவதாக தெரிவிக்கின்றனர். மேலும் ஒரு பங்கில் இருந்து மற்றொரு பங்கிற்கு விலையும் மாறுபடுகிறது. இருப்பினும் மக்களின் அன்றாட பயன்பாட்டிற்காக வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
பெட்ரோலில் தண்ணீர் கலந்த விவகாரம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு எப்போதும் போல நேற்று வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்பியுள்ளனர். ஆனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்பி விட்டு பங்கிலிருந்து சிறுது தூரம் சென்றவுடன் வாகனங்கள் பழுதாகி நின்றுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் குழப்பத்திற்கு ஆளானார்கள். இன்று இரு சக்கர வாகனங்கள் இல்லாதவர்களே பார்க்க முடியாது. நாம் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றாலோ, அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றாலோ நாம் பெரிதும் நம்பி இருப்பது இருச்சக்கர வாகனம் தான். ஆண்கள் பெண்கள் என அனைவருமே இதனை பயன்படுத்துகின்றனர். வாகன இயக்கத்திற்கு மிகவும் முக்கியமானது பெட்ரோல் தான். ஒரு பக்கம் பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது என்றால் மறுபக்கம் பெட்ரோல் கலப்படம் பற்றிய கவலை மக்களுக்கு இருக்கிறது.
நீண்ட காலமாகவே பெட்ரோலில் கலப்படம் செய்யப்படுகிறது, தரமான பெட்ரோல் வழங்கப்படுவதில்லை என்ற புகார் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனால் வாகனங்கள் எளிதில் பழுதாகி விடுவதாக தெரிவிக்கின்றனர். மேலும் ஒரு பங்கில் இருந்து மற்றொரு பங்கிற்கு விலையும் மாறுபடுகிறது. இருப்பினும் மக்களின் அன்றாட பயன்பாட்டிற்காக வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: ஒரே நாளில் ரூ.20300 கோடி கடனை அடைத்த டாடா சன்ஸ்.. வாய் அடைத்து போன ஆர்பிஐ!
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் இருக்கும் பெட்ரோல் பங்கில் வாகன ஓட்டிகள் பெட்ரோல் போட்டுள்ளனர். பெட்ரோல் போட்டு விட்டு பங்கில் இருந்து சிறுது தூரம் சென்றபோது வாகனம் பழுதாகி நின்றுள்ளது. இது ஒருவருக்கு மட்டுமல்ல அந்த் வழியாக சென்ற பலர் இந்த பிரச்சனையை சந்தித்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் குழப்பமடைந்துள்ளனர். அப்போது விசாரித்து பார்த்ததில் எல்லோரும் ஒரே பங்கில் பெட்ரோல் போட்டது தெரிய வந்துள்ளது.
மேலும் படிக்க: செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் இத பண்ணிடுங்க.. இல்லனா சிக்கல்!.. ஆதார் குறித்து வெளியான முக்கிய தகவல்!
இதனை தொடர்ந்து வாகன ஓட்டிகள் பங்கிற்கு சென்று பாட்டிலில் பெட்ரோல் நிரப்பும் படி கேட்டுள்ளனர். அப்போது பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் நடந்ததற்கு விளக்கம் கேட்டுள்ளனர். ஆனால் அங்கு இருந்த யாரும் முறையாக பதிலளிக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை பங்கில் வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதற்கிடையில் இது தொடர்பாக தலவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.