5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tasmac: குடிமகன்களுக்கு ஷாக்.. தீபாவளிக்கு முந்தைய நாள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை!

அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை விடப்படுவது குடிமகன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை கால இலக்கு வைத்து டாஸ்மாக் நிர்வாகம் செயல்பட்டு வரும் நிலையில் இந்த தொடர் விடுமுறை வசூலை பாதிக்கும் எனவும் கருதப்படுகிறது

Tasmac: குடிமகன்களுக்கு ஷாக்.. தீபாவளிக்கு முந்தைய நாள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 23 Oct 2024 15:26 PM

டாஸ்மாக் கடை விடுமுறை: மதுரையில் மருது பாண்டியர் நினைவு தினம், தேவர் ஜெயந்தி உள்ளிட்ட நிகழ்வுகளை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அக்டோபர் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 30 ஆம் தேதி வரை 4 நாட்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். மேலும் மனமகிழ் மன்றங்கள், தனியார் பார் ஆகியவை 3 நாட்கள் மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சிவகங்கை மற்றும் தூத்துக்குடியில் டாஸ்மாக் கடைகள் அக்டோபர் 30 ஆம் தேதி மூடப்படும் என சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னியில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. அவரது பிறப்பு மற்றும் இறப்பு ஒரே தேதியில் நிகழ்ந்த நிலையில் ஜெயந்தி விழா, குருபூஜை ஆகியவை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

Also Read: ” ஜோசியராக மாறிய எடப்பாடி பழனிசாமி, திமுகவில் ஒருபோதும் விரிசல் இருக்காது” – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

அந்த வகையில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தியும், 62வது குருபூஜையும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மட்டுமல்லாது தென்மாவட்டங்களில் தேவர் ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதனை முன்னிட்டு சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளையும், பல்வேறு நிபந்தனைகளையும் வெளியிட்டு வருகிறது.

பசும்பொன் நினைவிடத்துக்கு அன்றைய நாளில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர்கள், மற்ற கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், சமுதாய மக்கள் என ஆயிரக்கணக்கானோர் வருகை தருவார்கள். முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பொங்கலிட்டு, முடி காணிக்கை செலுத்தி தேவர் சமுதாய மக்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். அதுமட்டுமல்லாமல் அன்றைய நாள் கலை நிகழ்ச்சிகளும் களைக்கட்டும்.

Also Read: பிரபல கொலை குற்றவாளி சோட்டா ராஜனுக்கு ஜாமின்.. ஆயுள் தண்டனை நிறுத்தி வைத்து உத்தரவு..

இதனிடையே பசும்பொன்னில் தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் ராமநாதபுரம் டிஐஜி அபிநவ் குமார், ராமநாதபுரம் எஸ்பி சந்தீஸ் உள்ளிட்ட காவல்துறையினர் கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் தேவர் ஜெயந்தி அன்று பசும்பொன்னுக்கு முக்கிய பிரமுகர்கள் வரும் வழி, பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் பாதை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்படங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை விடப்படுவது குடிமகன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை கால இலக்கு வைத்து டாஸ்மாக் நிர்வாகம் செயல்பட்டு வரும் நிலையில் இந்த தொடர் விடுமுறை வசூலை பாதிக்கும் எனவும் கருதப்படுகிறது

Latest News