Terrorist Arrest: சென்னையில் பதுங்கி இருந்த தீவிரவாதி.. துப்பாக்கி முணையில் கைது..!
தீவிரவாதி கைது: சென்னையில் பதுங்கி இருந்த தீவிரவாதியை கைது செய்து மேற்கு வங்கம் அழைத்துச் சென்றனர். கடந்த ஆறு மாதமாக தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய அனோவர் சென்னையில் யார் யாரிடம் தொடர்பு வைத்துள்ளார். தமிழகத்திலும் இந்த அமைப்பிற்கு ஆட்களை சேர்த்து உள்ளாரா என்ற பல்வேறு கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் உருவாக்கப்பட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சென்னையில் பயங்கரவாதி கைது: சென்னையில் கடந்த ஆறு மாதமாக பதுங்கி இருந்த பயங்கரவாதியை மேற்குவங்க போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அல்கொய்தா அமைப்போடு தொடர்புடைய அன்சார் அல் இஸ்லாம் அமைப்பில் புதிதாக உருவான தீவிரவாத குழுவில் தொடர்புடையவர் என்பது விசாரணையில் அம்பலமானது. வங்கதேசத்தில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பில் தொடர்புடைய அன்சார் அல் இஸ்லாம் என்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பில் புதிதாக சஹதத் என்ற குழு உருவாக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக வங்கதேசம் தலைநகர் டாக்காவில் இந்த தீவிரவாத குழு தொடர்புடைய ஐந்து பேரை வங்கதேச தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சென்னையில் தீவிரவாதி சிக்கியது எப்படி?
தங்களுடைய தீவிரவாத அமைப்பை இந்தியா முழுவதும் பரப்புவதற்கு திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது குறிப்பாக மேற்கு வங்கத்தில் ஊடுருவி, அங்குள்ள இளைஞர்களை அன்சார் அல் இஸ்லாம் தீவிரவாத அமைப்பின் சஹதத் குழுவில் ஆட்களை சேர்ப்பதற்கு ஹபிபுல்லா என்ற கல்லூரி மாணவரிடம் மூளைச்சலவை செய்தது தெரியவந்துள்ளது. வெங்கடேச அதிகாரிகள் தங்கள் விசாரணையில் வெளிவந்த தகவலை மேற்கு வங்க மாநில போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் சிறப்பு தனிப்படை போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். குறிப்பாக கணினி அறிவியல் இளங்கலை பட்டம் படித்து வந்த ஹபிபுல்லா என்ற கல்லூரி மாணவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கல்லூரி மாணவனோடு தொடர்புடைய மேலும் 5 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர்கள் தீவிரவாத அமைப்போடு தொடர்பு வைத்துக்கொண்டு நிதி திரட்டும் பணியிலும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. வங்கதேசத்தில் இருந்து தப்பித்து வரும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததும் தெரியவந்துள்ளது. அன்சார் அல் இஸ்லாம் இந்த தீவிரவாத அமைப்பின் முக்கிய நபராக செயல்பட்ட ஹபிபுல்லாவுடன் தொடர்புடைய கூட்டாளிகளை தொடர்ந்து தேடும் பணியில் மேற்கு வங்க போலீசார் ஈடுபட்டனர்.ஹபிபுல்லா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அவர்களுடன் பி ஐ பி என்ற செயலி மூலம் யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில் குறுஞ்செய்திகள் ஆக தகவல்களை தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்தது தெரியவந்துள்ளது.
குறிப்பாக மேற்கு வங்கத்தின் பர்தவான் மாவட்டத்தில் கான்க்சா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு வந்தனர். ஹபிபுல்லா மற்றும் அவரது கூட்டாளிகள் ஆகியோருடன் செல்போன் சமூக வலைதளங்கள் உள்ளிட்டவை மூலமாக தொடர்பு கொண்டு பேசும் நபர்கள் யார் என்பது குறித்து எல்லாம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சென்னையில் இந்த அமைப்பில் தொடர்புடைய நபர் பதுங்கி இருப்பது மேற்கு வங்க போலீசாருக்கு தெரியவந்தது
இதனை எடுத்து மேற்குவங்க தனிப்படை போலீசார் சென்னை வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். குறிப்பாக மேற்கு வங்க போலீசார் க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கோயம்பேட்டில் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் தங்கி இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்று விசாரிக்கும் பொழுது தனியார் ஓட்டல் ஒன்றில் இஸ்திரி ஊழியராக பணியாற்றி வந்தது தெரிய வந்தது. இதை எடுத்து மேற்கு வங்க டிஎஸ்பி ஃபிகர் தலைமையிலான தனிப்படை போலீசார் கோயம்பேடு போலீசாருடன் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபடும் பொழுது கோயம்பேடு அருகே காளியம்மன் கோயில் சாலையில் சம்பந்தப்பட்ட நபரை அதிகாரிகள் கைது செய்தனர்
விசாரணை மேற்கொண்டதில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 30 வயதுடைய அனோவர் ஷேக் என்பது தெரியவந்தது இவர் வங்கதேசத்தில் தடை செய்யப்பட்ட அன்சார் அல் இஸ்லாம் அமைப்பின் புதிதாக உருவாக்கப்பட்ட தீவிரவாத சஹதத் குழுவில் இணைந்து பல இந்திய இளைஞர்களை தீவிரவாத அமைப்பிற்கு ஆட்சிக்கும் பணியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது
குறிப்பாக புலம்புரிந்த தொழிலாளர்கள் அதிகளவு சென்னைக்கு கட்டுமான பணிக்கு மேற்கொள்ள வந்ததால் அவர்களோடு தொழிலாளர்களோடு தொழிலாளர்களாக சேர்ந்து சென்னையில் தலைமறைவாக இருந்தது தெரிய வந்துள்ளது. ஆனால் கட்டுமான தொழிலை மேற்கொள்ளும் நபர்கள் ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிற காரணத்தினால் கட்டுமான பணிகளை மேற்கொள்ளாமல் அனோவர் தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் தங்கி இருக்கும் குடியிருப்பு அருகே உள்ள கட்டுமானம் நடைபெறும் இடத்தில் மேற்கு வங்க கட்டுமான தொழிலாளர்களுடன் சேர்ந்து தங்கி தலைமறைவாக இருந்தது மட்டும் தெரிய வந்துள்ளது.
ஆனால் தொடர்ந்து சென்னையில் தங்குவதற்கு பணம் தேவைப்பட்ட காரணத்தினால் விருகம்பாக்கம் 100 அடி காலையில் உள்ள தனியார் ஓட்டலில் இஸ்திரி ஊழியராக ஒன்றரை மாதம் பணியாற்றி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை எடுத்து பயங்கரவாதியான அனோவர் ஷேக்கை மேற்கு வங்க போலீசார் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ட்ரான்சிட் வாரண்ட் பெற்றனர்.
இதனையடுத்து சென்னையில் இருந்து மேற்கு வங்கத்திற்கு அழைத்துச் சென்றனர். கடந்த ஆறு மாதமாக தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய அனோவர் சென்னையில் யார் யாரிடம் தொடர்பு வைத்துள்ளார். தமிழகத்திலும் இந்த அமைப்பிற்கு ஆட்களை சேர்த்து உள்ளாரா என்ற பல்வேறு கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் உருவாக்கப்பட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ஏற்கனவே தீவிரவாத அமைப்பு சேர்ந்தவர்களின் கூடாரமாக சென்னை உள்ளதா என்ற சந்தேகம் ஏற்படும் வகையில், பெங்களூரு குண்டுவெடிப்பு விவகாரம் தொடர்புடைய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் சென்னையில் தங்கி பெங்களூரில் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியதாக விசாரணையில் தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து தற்போது புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்களுடன் சேர்ந்து தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கடந்த ஆறு மாதமாக சென்னையில் தலைமறைவாக இருந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது