TTF Vasan: சர்ச்சையில் சிக்கிய டிடிஃப் வாசன்.. இந்த முறை இப்படியா? வலுக்கும் கண்டனங்கள்..

டிடிஎஃப் வாசன் பிரபல யூடியூபர். இவர் பைக் ஓட்டி பல்வேறு சாகசங்களை செய்தற்கு பெயர் போனவர். அபாயகரமான ஸ்டண்ட்களை பார்த்து இளம் வயதினர், சிறுவர்க்ள் சாலை பாதுகாப்பை கடைப்பிடிக்காமல் வாகனங்களை இயக்கி வருவதன் காரணமாக இவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர்.

TTF Vasan: சர்ச்சையில் சிக்கிய டிடிஃப் வாசன்.. இந்த முறை இப்படியா? வலுக்கும் கண்டனங்கள்..

டிடிஃப் வாசன் வெளியிட்ட வீடியோ

Published: 

12 Jul 2024 10:32 AM

டிடிஃப் வாசன்: பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் திருப்பதி கோயிலில் பிராங்க் வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் திருப்பதியில் பக்தர்களை ஏமாற்றி பிராங்க் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட டிடிஎஃப் வாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. டிடிஎஃப் வாசன் பிரபல யூடியூபர். இவர் பைக் ஓட்டி பல்வேறு சாகசங்களை செய்தற்கு பெயர் போனவர். அபாயகரமான ஸ்டண்ட்களை பார்த்து இளம் வயதினர், சிறுவர்க்ள் சாலை பாதுகாப்பை கடைப்பிடிக்காமல் வாகனங்களை இயக்கி வருவதன் காரணமாக இவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர்.


சமீபத்தில் பைக் வித்தை காட்ட முயன்று டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கி அவருக்கு கை, கால்கள் உடைந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது. இதற்காகவும் வழக்கை சந்தித்து, நீதிமன்றத்தின் மூலம் பைக் ஓட்டும் உரிமத்தை நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால் பைக் ஓட்டுவதை நிறுத்தி தற்போது எங்கு சென்றாலும் காரில் தான் பயணம் மேற்கொள்கிறார். இதிலும் ஒருமுறை அவர் கார் இயக்கும் போது சீட் பெல்ட் அணியாமல் செல்போனில் பேசிக்கொண்டு சென்றுள்ளார். இதற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

Also Read: தமிழ்நாட்டில் மின்தடை.. எந்தெந்த மாவட்டங்களில்? லிஸ்ட் இதோ..

சமூகவளைத்தில் தொடர்ந்து சர்ச்சைகள் உண்டான பதிவுகளை போட்டு பிரபலம் ஆவதை வழக்கமாக கொண்டுள்ள டிடிஎஃப் வாசன் தற்போது புது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக நாராயணகிரி பூங்காவில் அமைக்கப்பட்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் டிடிஎஃப் வாசன் மற்றும் அவரது நண்பர்கள் தரிசனத்திற்காக கதவுகளை திறப்பது போன்று அருகில் சென்று பின்னர் ஏமாற்றி வரும் வீடியோவை பதிவு செய்து அந்த வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் டிடிஎஃப் வாசன் பதிவிட்டார்.

இந்த வீடியோ வெளியிட்ட டிடிஎஃப் வாசனுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில் பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இது குறித்து விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Also Read: ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமணம்.. ரூ. 5000 கோடி செலவில் கோலாகல ஏற்பாடுகள்..

இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!