தொண்டர்களின் ஆரவாரத்துடன் உற்சாகமாக மாநாட்டு மேடையில் ரேம்ப் வாக் செய்த விஜய்
இன்று விக்ரவாண்டியில் விஜயின் கட்சி மாநாடு தொடங்கி நடந்து வருகிறது. சற்று நேரத்திற்கு முன்னதாக மேடைக்கு வந்த விஜய் ரேம் வாக்கில் நடந்து தொண்டர்களுக்கு தனது வணக்கத்தை தெரிவித்தார். அப்போது தொண்டர்கள் ரேம்ப்பில் தூக்கிப்போட்ட தங்களது கட்சித் துண்டை தனது கழுத்தில் போட்டுக்கொண்டு நடந்தார்.
விக்ரவாண்டியில் நடக்கும் தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டிற்கு வந்த விஜய் மேடையில் உள்ள ரேம்ப் வாக்கில் தொண்டர்களின் ஆரவாரத்துடன் உற்சாகமாக நடந்து சென்றார். கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியினை தொடங்கிய நடிகர் விஜய் இன்று பிரமாண்டமாக முதல் மாநாட்டை தொடங்கியுள்ளார். நடிகர் விஜயின் ரசிகர்களாக இருந்த பல்லாயிரக்கணக்கானோர் தற்போது தலைவர் விஜயின் தொண்டர்களாக மாறியுள்ளனர். மாநாட்டு மேடைக்கு வந்த விஜய்கு முதலில் பூங்கொத்து அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாநாட்டிற்காக போடப்பட்ட ரேம்ப் வாக்கின் இறுதிவரை சென்று தொண்டர்களுக்கு வணக்கத்தைக் தெரிவித்த விஜய் அவர்கள் அளித்த கட்சி துண்டினை தனது கழுத்தில் போட்டுக்கொண்டு சென்றார். மிகுந்த உற்சாகத்துடன் ரேம்பில் நடந்த விஜயை பார்த்து தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தனது கட்சி பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம்(Tamizhaga Vetri kazhagam) என்று அறிவித்தார். கட்சி பெயரில் எழுதுப் பிழை இருப்பதாக பலர் கருத்து தெரிவித்ததும் கட்சியின் பெயரினை, தமிழக வெற்றிக் கழகம் என மாற்றி அறிவித்தார்.
Also read… நடிகர் விஜயின் கட்சி மாநாடு… குவியும் பிரபலங்களின் வாழ்த்துகள்
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த சட்டசபைத் தேர்தல் நடைபெறும் 2026ம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, கட்சி செயல்பாடுகள் என தொடர்ந்து வேலை செய்து வருகிறார் விஜய்.
இன்று விக்ரவாண்டியில் விஜயின் கட்சி மாநாடு தொடங்கி நடந்து வருகிறது. சற்று நேரத்திற்கு முன்னதாக மேடைக்கு வந்த விஜய் ரேம் வாக்கில் நடந்து தொண்டர்களுக்கு தனது வணக்கத்தை தெரிவித்தார். அப்போது தொண்டர்கள் ரேம்ப்பில் தூக்கிப்போட்ட தங்களது கட்சித் துண்டை தனது கழுத்தில் போட்டுக்கொண்டு நடந்தார்.
ரேம்ப் வாக்கில் நடந்து முடிந்தவுடன் மேடைக்கு வந்த விஜய் சுதந்திர போராட்ட தியாகிகளின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தனது கட்சியின் கொடியை 100 அடி கம்பத்தில் ஏற்றினார் விஜய்.