முடிவோடு தான் வந்திருக்கிறேன்.. பின் வாங்கும் எண்ணம் இல்லை – மாநாட்டில் விஜய் பேச்சு
Thalapathy Vijay: மேடையில் இருந்தாலும் சரி, மேடைக்கு முன்பு இருந்தாலும் சரி, இந்த நான் நீ நாங்க நீங்க அப்படின்றது கிடையாது நாம... இங்க யார் மேல யார் கீழ என்ற பாகுபாடு எல்லாம் நாம எப்பவும் பாக்க போறது இல்ல. நம்மல பொருத்த வரை எல்லாருமே ஒன்னுதான். எல்லாரும் சமம் தான். அதனால ‘என் நெஞ்சில் குடியிருக்கும் ஒட்டுமொத்தமான உங்க எல்லாருக்கும் என்னுடைய உயிர் வணக்கங்கள்’ என்று விஜய் தெரிவித்தார்.
அரசியலுக்கு முடிவோடு தான் வந்திருக்கிறேன், பின் வாங்கும் எண்ணம் இல்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் நடக்கும் முதல் இது. இன்று விக்கிரவாண்டியில் தொடங்கிய இந்த மாநாட்டில் தலைவர் விஜய் உட்பட கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். மாநாட்டின் மேடைக்கு வந்த விஜய் முதலில் ரேம் வாக்கில் நடந்து தொண்டர்களுக்கு தனது வணக்கத்தை தெரிவித்தார். அப்போது தொண்டர்கள் ரேம்ப்பில் தூக்கிப்போட்ட தங்களது கட்சித் துண்டை தனது கழுத்தில் போட்டுக்கொண்டு நடந்தார். ரேம்ப் வாக்கில் நடந்து முடிந்தவுடன் மேடைக்கு வந்த விஜய் சுதந்திர போராட்ட தியாகிகளின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தனது கட்சியின் கொடியை 100 அடி கம்பத்தில் ஏற்றினார் விஜய்.
அதனை தொடர்ந்து கட்சியின் உறுதி மொழி ஏற்கப்பட்டது. பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பாடல் மாநாட்டில் ஒலிபரப்பப்பட்டது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனத் தொடங்கும் அதில் திருவள்ளூவர், பெரியார், அம்பேத்கர், காமராஜர் வழியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பயணம் இருக்கும் என்று கொள்கை பாடலில் கூறப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மேடையில் விஜய் பேசத் தொடங்கினார். தான் அரசியலுக்கு வந்தது குறித்து குழந்தை கதை சொல்லி குழந்தை போல எதற்கும் பயப்படாமல் அரசியலில் செயல்படுவேன் என்று தெரிவித்தார். அபோது இந்த உணர்ச்சிமயமான தருணத்தில் மேடைப்பேச்சின் ஃபார்மெட்டை மறந்துவிட்டேன் என்று பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களே, இணை கொள்கை பரப்புச் செயலாளர் தாகீரா அவர்களே… என்று காமெடியாக பேசிய அவர் இங்க எதுக்கு அவர்களே இவர்களே எல்லாம் நம் கட்சியின் கொள்கையே “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” அறிவிச்சுட்டு அவங்க இவங்கனு எதுக்கு பிரிச்சு பாக்கனும்.
Also read… மழலை போல உணர்கிறேன்… மாநாட்டில் பேசத் தொடங்கினார் விஜய்!
மேடையில் இருந்தாலும் சரி, மேடைக்கு முன்பு இருந்தாலும் சரி, இந்த நான் நீ நாங்க நீங்க அப்படின்றது கிடையாது நாம… இங்க யார் மேல யார் கீழ என்ற பாகுபாடு எல்லாம் நாம எப்பவும் பாக்க போறது இல்ல. நம்மல பொருத்த வரை எல்லாருமே ஒன்னுதான். எல்லாரும் சமம் தான். அதனால ‘என் நெஞ்சில் குடியிருக்கும் ஒட்டுமொத்தமான உங்க எல்லாருக்கும் என்னுடைய உயிர் வணக்கங்கள்’ என்று விஜய் தெரிவித்தார்.
பாம்மா இருந்தாலும், அரசியலா இருந்தாலும் பயப்பட மாட்டேன் என்று பேசிய விஜய், அரசியலுக்கு முடிவோடு தான் வந்திருக்கிறேன், பின் வாங்கும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.