என் தங்கை வித்யா இறந்தப்போ ஏற்பட்ட பாதிப்பு அனிதா இறந்தப்போ வந்துச்சு – விஜய் - Tamil News | Thalapathy Vijay Talks about his own sister compare with student Anitha against Neet | TV9 Tamil

என் தங்கை வித்யா இறந்தப்போ ஏற்பட்ட பாதிப்பு அனிதா இறந்தப்போ வந்துச்சு – விஜய்

Thalapathy Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கப்போது பெண்கள். என்னுடைய அம்மாக்கள், என்னுடைய அக்கா, தங்கைகள், என் நண்பிகள். என் கூட பிறந்த தங்கச்சி வித்யா இறந்த போது எனக்குள்ள ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதில் கொஞ்சம் கூட குறையாத பாதிப்பையும், வேதனையையும் ஏற்படுத்தியதுதான் தங்கச்சி அனிதா உடைய மரணம். தகுதி இருந்தும் தடையாக இருந்தது நீட். 

என் தங்கை வித்யா இறந்தப்போ ஏற்பட்ட பாதிப்பு அனிதா இறந்தப்போ வந்துச்சு - விஜய்

விஜய்

Published: 

27 Oct 2024 21:11 PM

என் கூட பிறந்த தங்கை வித்யா இறந்தப்போ ஏற்பட்ட பாதிப்பு தங்கை அனிதா இறந்தப்போ வந்துச்சு என்று மாநாட்டில் நீட்டிற்கு எதிராக விஜய் பேசியுள்ளார். இன்று விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைப்பெற்றது. இந்த நிகழ்சில் கட்சிக் கொடி எற்றிவைத்து, கட்சியின் கொள்கைப் பாடலை வெளியிட்டப்பிறகு விஜய் தொண்டர்களிடையே பேசத் தொடங்கினார். நம் கட்சியின் கொள்கையே “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”. நம்மல பொருத்த வரை எல்லாருமே ஒன்னுதான். எல்லாரும் சமம் தான். நம்மல பொருத்த வரை எல்லாருமே ஒன்னுதான். எல்லாரும் சமம் தான் என்றும் தெரிவித்துள்ளார் விஜய். கட்சியின் கொள்கைகளை தொடர்ந்து கூறிவந்த விஜய், பெண்களுக்கு சம உரிமை, பெண்கல்வி குறித்து பேசுகையில் மானவி அனிதாவை தனது தங்கையுடன் ஒப்பிட்டு பேசினார்.

மாநாட்டில் பேசத் தொடங்கிய விஜய் அரசியல்லாம் எதுக்குங்க.. நாமபாட்டுக்கு நடிச்சோமா, நாளு காசு பாக்கலாமானுதான் நானும் இருந்தே. ஆனா நாம மட்டும் நல்லா இருக்கனும்னு நினைக்கிறது சுயநலம் இல்லையா? நம்மல வாழ வச்ச இந்த மக்களுக்கு எதுவும் செய்யாம இருப்பது நல்ல விசுவாசமா இருக்குமா? ஒரு லெவலுக்கு மேல காசு சேத்து என்ன செய்யப்போறோம். நமக்கு இந்த வாழ்கைய கொடுத்த மக்களுக்கு நாம என்னதான் செய்யப்போறோம் என்ற கேள்வி எனக்குள்ள இருந்துந்துகிட்டே இருந்துச்சு.

இந்த எல்லா கேள்விகளுக்கு ஒரு விடைய கண்டுபிடிக்க யோசிச்சப்போதான் ‘அரசியல்’ அப்படின்ற ஒரு விடை கிடைத்தது. இந்த அரசியல் சரியா வருமா, நாம இயல்புக்கு இது செட்டாகுமானு நிறைய கேள்வி வந்துச்சு ஆனா இதெல்லாம் யோசிட்டு இருந்தா எதும் செய்ய முடியாது. சில விசயங்களை பின்விளைவுகள் பார்க்காம எறங்கி செஞ்சாதான் நம்மள நம்புறவங்களுக்கு நல்லது செய்ய முடியும்னு தோனுச்சு. அதான் எறங்கிட்டேன் இனி எத பத்தியும் யோசிக்கப்போறது இல்ல.

Also read… பிளவுவாதிகளும் ஊழல்வாதிகளும் நமக்கு எதிரிகள் – விஜய் பேச்சு

இது எதோ சோசியல் மீடியாவில் கம்பு சுத்தவந்த கூட்டம் இல்ல, இந்த சமூகத்திற்காக வால் ஏந்தி நிக்கப்போற கூட்டம். நம்ம மண்ணை வாழ வைப்பதற்காக அரசியல் வால் ஏந்தி நிக்கப்போற கூட்டம். மாநாட்டில் கூடியிருப்பவர்கள் மட்டும் எங்கள் தொண்டர்கள் அல்ல. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வீட்டில் டிவி முன்பு அமர்ந்து இந்த கூட்டத்தைப் பல தொண்டர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் விஜய் தெரிவித்தார்.

கொள்கை மற்றும் கோட்பாடு அடிப்படையில் நாம் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் பிரித்து பார்க்கப்போவது இல்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணோட இரண்டு கண்கள்.

ஜனநாயகம், சமூகநீதி, சகோதரத்துவம், சமத்துவம், சமய நல்லிணக்கம், பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், பகுத்தறிவு சிந்தனை மனப்பாண்மை, மாநில தன்னாட்சி, இருமொழி ஆட்சிக் கொள்கை, இயற்கை வள பாதுகாப்பு, கால நிலை மாற்றத்திற்கு ஏற்ற வளர்ச்சி, உற்பத்தி திறன், உடல் நலனை கெடுக்கும் எவ்வகை போதையும் இல்லா தமிழகம் என்ற கொள்கைகளின் அடிப்படையில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கின்ற புரட்சிகர தத்துவத்தின் அடிப்படையில் சமதர்ம சமூகத்தை உருவாக்குவது நம்ம மெயின் டார்கெட்.

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கப்போது பெண்கள். என்னுடைய அம்மாக்கள், என்னுடைய அக்கா, தங்கைகள், என் நண்பிகள். என் கூட பிறந்த தங்கச்சி வித்யா இறந்த போது எனக்குள்ள ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதில் கொஞ்சம் கூட குறையாத பாதிப்பையும், வேதனையையும் ஏற்படுத்தியதுதான் தங்கச்சி அனிதா உடைய மரணம். தகுதி இருந்தும் தடையாக இருந்தது நீட்.

அப்போ ஒரு முடிவு பன்னினேன். வாய் நிறைய விஜய் அண்ணா, விஜய் அண்ணா என்று நம்மள மனசார கூப்பிடுற இந்த பெண் பிள்ளைகளின் கல்வி, வாழ்க்கை என எல்லாவற்றிலும் நிரந்தர பாதுகாப்பு ஏற்படுத்தனும்னு. இனிமேல் கவலைபடதீங்க, உங்க மகன், உங்க அண்ணன், உங்க தம்பி,  உங்க தோழன், உங்க விஜய் களத்திற்கு வந்துட்டேன். உறவா நட்பா என்னை பாக்கிற குட்டீஸ் இருந்து பாட்டீஸ் வரை எல்லாருக்காமன ஆளாக இருப்பேன் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

அதிகாலையில் சைக்கிளிங் செய்வதால் கிடைக்கும் பலன்கள்!
இந்த பிரச்சனைகள் இருந்தால் நிச்சயம் ஆப்பிள் பழம் சாப்பிடக்கூடாது..
வேர்க்கடலை குறித்து ஆய்வுகள் கூறும் தகவல்கள்!
சர்க்கரை நோயாளிகள் எந்த 4 பழங்களை சாப்பிடக்கூடாது?