5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Thanjavur: பள்ளியில் ஆசிரியர் கொலை.. மாணவர்களுக்கு இன்று கவுன்சிலிங்!

முன்னதாக ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்டதையும், அவர் இரத்த வெள்ளத்தில் இருந்ததையும் மாணவர்களும், ஆசிரியர்களும் பார்த்தனர். இதனால் அவர்களுக்கு மனநிலை தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என கருதி கவுன்சிலிங் அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார்.

Thanjavur: பள்ளியில் ஆசிரியர் கொலை.. மாணவர்களுக்கு இன்று கவுன்சிலிங்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 25 Nov 2024 11:18 AM

மாணவர்களுக்கு கவுன்சிலிங்: தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் பள்ளி வளாகத்தில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இன்று அப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்டதையும், அவர் இரத்த வெள்ளத்தில் இருந்ததையும் மாணவர்களும், ஆசிரியர்களும் பார்த்தனர். இதனால் அவர்களுக்கு மனநிலை தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என கருதி கவுன்சிலிங் அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட அரசு பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறையும் விடப்பட்டிருந்தது. இப்படியான நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தனியார் மண்டபத்தில் வைத்து கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை பள்ளி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Accident: கூகுள் மேப் காட்டிய வழி.. பாலத்தில் இருந்து கவிழ்ந்த கார்.. 3 பேர் பலி!

ஆசிரியை ரமணி கொலை சம்பவம்

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரத்தை அடுத்துள்ள மல்லிப்பட்டினம் பகுதியின் சின்னமனை ஏரியாவை சேர்ந்தவர் முத்து. இவரது மூத்த மகளான ரமணி மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூன் மாதம் முதல் தற்காலிக தமிழ் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்தி வந்த அவர் பள்ளியில் அனைத்து மாணவர்களுக்கும் விருப்பமான ஆசிரியையாக இருந்து வந்தார்.

இதனிடையே சின்னமனை ஊரைச் சேர்ந்த மீனவர் கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவரான பன்னீர் செல்வத்தின் மகன் மதன்குமார் சிங்கப்பூரில்  4 ஆண்டுகளாக வேலை செய்துவிட்டு 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் ஊருக்கு திரும்பி மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இப்படியான நிலையில் ரமணியும் மதன்குமார் ஒரே ஊர் மற்றும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது. இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இருவரும் காதலித்து வந்த நிலையில் ரமணியின் வீட்டுக்கு பெண் கேட்டு மதன்குமார் குடும்பத்துடன் சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் ரமணியின் பெற்றோர் பெண் கொடுக்க மறுத்துள்ளனர். மேலும் ரமணியின் உறவினர் ஒருவர் மதன்குமாரின் பழக்க வழக்கம் சரி இல்லை என தெரிவித்ததால் இந்த முடிவை அவரது பெற்றோர் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு ரமணி மதன்குமாருடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக சொல்லப்படுகிறது. இன்னும் பலமுறை தன்னை சந்தித்து திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.

இப்படியான நிலையில் கடந்த நவம்பர் 19ஆம் தேதி பள்ளியிலிருந்து ரமணியை மதன்குமார் மீண்டும் சந்தித்துள்ளார். அப்போது பாடவேளை இல்லை என்பதால் ரமணி ஆசிரியருக்கான ஓய்வறையில் இருந்துள்ளார். இருவரும் வெளியே வளாகத்தில் நின்று பேசிக் கொண்டே இருந்துள்ளனர். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மதன் குமார் தெரிவிக்கவே ரமணி அதனை மறுத்து திட்டியுள்ளார். மேலும் அவரை பள்ளியில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Also Read: Crime: மனைவி தூக்கிட்டு தற்கொலை.. சோகத்தில் கணவன் எடுத்த விபரீத முடிவு!

இதனால் ஆத்திரமடைந்த மதன்குமார் தனக்கு கிடைக்காத காதலி யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற கோபத்தில் மறைத்து வைத்திருந்த மீன் வெட்ட பயன்படுத்தும் கத்தியை கொண்டு ரமணியின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். தன் மீதான தாக்குதலை சற்றும் எதிர்பாராத ரமணி அதனை தடுக்க முயன்ற போது அவரது கைகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

பள்ளி வளாகத்தில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் உடனடியாக மதன்குமாரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதற்கு இடையில் சம்பவம் நடந்த பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். உயிரிழந்த ஆசிரியைக்கு தமிழகம் முழுவதும் ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேசமயம் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணி குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Latest News