5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Party: அரசியலில் முதல் வெற்றி.. கவுன்சிலராக பதவியேற்ற த.வெ.க., நிர்வாகி.. மகிழ்ச்சியில் விஜய்!

புதிதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாநகராட்சியின் முதல் மேயராக திலகவதி செந்தில் இன்று பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து துணை மேயராக வியாகத் அலி பதவியேற்று கொண்டார். தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்களும் பதவியேற்றனர். இதில் புதுக்கோட்டை மாவட்ட தமிழக கட்சி கழகத்தின் பொறுப்பாளரான ஃபர்வேஸ்கவுன்சிலராக பதவி ஏத்துக் கொண்டார்.

TVK Party: அரசியலில் முதல் வெற்றி.. கவுன்சிலராக பதவியேற்ற த.வெ.க., நிர்வாகி.. மகிழ்ச்சியில் விஜய்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 09 Oct 2024 21:47 PM

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாமன்ற உறுப்பினராக புதுக்கோட்டை மாநகராட்சியில் அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளராக உள்ள வழக்கறிஞர் ஃபர்வேஸ் இன்று பொறுப்பேற்றார். அவர் பதவியேற்ற வீடியோவை சமூக வலைத்தளங்களில் தொண்டர்கள் வைரலாக்கி வருகின்றனர். மேலும் அரசியலில் களம் கண்டுள்ள விஜய்க்கு இந்த நிகழ்வு மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். பல ஆண்டுகளாக அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என தகவல் மட்டுமே வெளியாகிய நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென கட்சி தொடங்குவதாக அவர் அறிவித்தார். மேலும் தன்னுடைய கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து விஜய் வெளியிட்ட அறிக்கையில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் தான் தன்னுடைய இலக்கு என தெளிவாக எடுத்துரைத்தார்.

Also Read: TNPSC: சூப்பர் அறிவிப்பு.. 2வது முறையாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள் அதிகரிப்பு!

அதன்பிறகு அரசியல் தலைவர்களின் பிறந்தநாள், முக்கிய நிகழ்வுகள் என அனைத்துக்கும் வாழ்த்துக்கள் தொடங்கி அடிப்படை அரசியல் பணியை கவனித்து வந்தார். கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் முதல்முதலில் தமிழக அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டார். இப்படியான நிலையில் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னை பனையூரில் நடைபெற்றது. இதில் சிவப்பு மஞ்சள் வண்ணம் சூழ்ந்திருக்க நடுவில் வாகை மலர், இரண்டு பக்கமும் யானைகள் என கொடியை அறிமுகப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து வரும் அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் மற்றும் தொண்டர்கள் கலந்துக் கொண்டனர். இதனிடையே மாநாட்டுக்கான பணிகள் எல்லாம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காவல்துறையினரின் அனுமதியும் பெறப்பட்டு மாநாட்டுக்கான திட்டங்கள் அனைத்தும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விஜய் மாநாடு தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “நம் கழகத்தின் முதல் மாநில மாநாடு என்பது நம்முடைய அரசியல் கொள்கைப் பிரகடன மாநாடு. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி, மாநாட்டில் பங்கேற்பது வரை நம் கழகத்தினர் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்குவர் என்பதை இந்த நாடும் நாட்டு மக்களும் உணர வேண்டும்.நம் கழகம், மற்ற அரசியல் கட்சிகள் போல் சாதாரண இயக்கமன்று. இது ஆற்றல் மிக்கப் பெரும்படை. இளஞ்சிங்கப் படை. சிங்கப் பெண்கள் படை. குடும்பங்கள் இணைந்த கூட்டுப் பெரும்படை” என தெரிவித்திருந்தார்.

இப்படியான  நிலையில் புதிதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாநகராட்சியின் முதல் மேயராக திலகவதி செந்தில் இன்று பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து துணை மேயராக வியாகத் அலி பதவியேற்று கொண்டார். தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்களும் பதவியேற்றனர். இதில் புதுக்கோட்டை மாவட்ட தமிழக கட்சி கழகத்தின் பொறுப்பாளரான ஃபர்வேஸ் கவுன்சிலராக பதவி ஏத்துக் கொண்டார்.

Also Read: UPI : UPI 123 Pay மற்றும் UPI Lite பரிவர்த்தனை வரம்பை உயர்த்திய ரிசர்வ் வங்கி.. எவ்வளவு தெரியுமா?

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏராளமானோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ஆனால் தமிழக வெற்றி கழகம் கட்சி தொடங்கப்பட்ட நிலையில் கவுன்சிலராக ஃபர்வேஸ் பதவியேற்றுள்ளார் என்பது கவனிக்கத்தக்க விஷயமாக மாறியுள்ளது. அவர் பதவியேற்ற சம்பவம் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 2026 ஆம் ஆண்டு கண்டிப்பாக நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என தமிழக வெற்றிக் கழகத்தினர் சூளுரைத்து வரும் நிலையில் இந்த நிகழ்வு தங்களின் வெற்றிக்கான ஏணிப்படியாக பார்க்கப்படுவதாக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest News