தமிழகத்தில் இன்றுடன் முடிவுக்கு வருகிறது தேர்தல் நடத்தை விதிகள்
Election Code of Conduct: ஒருவர் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அதிக மதிப்புள்ள பொருட்கள் கொண்டு செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த சோதனையில் ரொக்கப்பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள், மதுபான வகைகள், இலவச பரிசுப்பொருட்கள், போதை பொருட்கள் என ரூ.1,300 கோடிக்கும் அதிக மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மக்களவை தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6-ம் தேதியான இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்றால் தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்த உடன் அமலுக்கு வரும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் இந்த விதிகளை வகுத்துள்ளது. எல்லா அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் இந்த விதிகளை பின்பற்றுவது அவசியமாகும். இந்த விதிகளை மீறினால், தேர்தல் ஆணையம் வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். குற்றவியல் வழக்குப் பதிவு செய்து சிறை தண்டனை கூட வழங்க முடியும். இந்த விதிகள் அமலில் இருக்கும் போது அரசு எந்த புதிய திட்டத்தையும் அறிவிக்க முடியாது. அனுமதி பெறாமல் கட்சி கொடிகள், பேனர்களை வீடுகளுக்கு முன் வைக்கக் கூடாது போன்ற விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 16-ம் தேதி வெளியிட்டது. அன்றில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 3 குழுக்கள் வீதம் 702 தேர்தல் பறக்கும் படை குழுக்கள் மற்றும் 702 நிலையான நிலையான கண்காணிப்பு குழுக்கள் தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்கள் எட்டு மணி நேரம் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்கணிப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
Also read… இது திராவிட மண்… இணையத்தை கலக்கும் திவ்யா சத்யராஜின் போஸ்ட்!
ஒருவர் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அதிக மதிப்புள்ள பொருட்கள் கொண்டு செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த சோதனையில் ரொக்கப்பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள், மதுபான வகைகள், இலவச பரிசுப்பொருட்கள், போதை பொருட்கள் என ரூ.1,300 கோடிக்கும் அதிக மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிய ஆவணங்கள் காட்டப்பட்ட பொருட்கள் மட்டும் விடுவிக்கப்பட்டன. தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்ததைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் சோதனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ல் வெளியான நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் இன்று நிறைவடைகின்றன.