5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

30 அடி கிணற்றில் விழுந்த யானைக்குட்டி… போராடி மீட்ட வனத்துறையினர்

Elephant Rescue: நீலகிரி அருகே உள்ள கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் நேற்று நள்ளிரவு யானைக் கூட்டத்தில் இருந்த குட்டியானை ஒன்று தவறி சண்முகநாதன் என்பவர் வீட்டு கிணற்றுக்குள் விழுந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றுக்குள் விழுந்த குட்டி யானையை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

30 அடி கிணற்றில் விழுந்த யானைக்குட்டி… போராடி மீட்ட வனத்துறையினர்
கிணற்றுக்குள் யானைக்குட்டி
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 30 May 2024 13:51 PM

நீலகிரி மாவட்டம் பந்தலூர் குறிஞ்சி நகர் பகுதியில் நேற்று நள்ளிரவில் யானை கூட்டத்திலிருந்த யானைக்குட்டி ஒன்று தவறி கிணற்றுக்குள் விழுந்தது. சண்முகநாதன் என்பவர் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த யானை குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். 30 அடி கிணற்றிற்குள் விழுந்த யானைக்குட்டியை கிணற்றுக்குள் இருந்து சுமார் 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். பின்னர் யானைக்குட்டியை தாய் யானையுடன் சேர்த்து வைத்து வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கர்நாடகா மற்றும் கேரள மாநில எல்லைகளுக்கு அருகே கூடலூர் பகுதி அமைந்துள்ளது. கூடலூர் அருகே அடர் வனப்பகுதிகளும், முதுமலை புலிகள் காப்பகமும் அமைந்துள்ளது.

இங்கு புலிகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டு மாடுகள், காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வனப்பகுதியில் வசிக்கின்றன. அவ்வப்போது இந்த விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளின் அருகே சுற்றித் திரிவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், நீலகிரி அருகே உள்ள கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் நேற்று நள்ளிரவு யானைக் கூட்டத்தில் இருந்த யானைக்குட்டி ஒன்று தவறி சண்முகநாதன் என்பவர் வீட்டு கிணற்றுக்குள் விழுந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றுக்குள் விழுந்த யானைக்குட்டியை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

Also read… நடிகர் விஜயின் அரசியல் குறித்து எஸ்.ஏ.சந்தரசேகரின் கருத்து!

குட்டியை மீட்க ஒரு குழுவும், தாய் மற்றும் யானை கூட்டத்தை கண்காணிக்க ஒரு குழுவும் உருவாக்கப்பட்டு மீட்பு பணியை தீவிரப்படுத்தினர். ஜே.சி.பி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு கிணற்றின் பக்கவாட்டில் பள்ளம் தோண்டி, யானைக்குட்டி வெளியேறும் வகையில் வழியை உருவாக்கினர். இந்நிலையில், சுமார் 30 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி சுமார் 10 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டது. பின்னர் குட்டி யானை வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டது. யானைக்குட்டியை வனத்துறையினர் தாய் யானையுடன் சேர்த்து வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest News