அடுத்த இரு தினங்கள்.. சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு.. இந்திய வானிலை ஆய்வு மையம்!
IMD latest Report: தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதாகவும் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வட மாநிலங்களில் குளிர் காலநிலை அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் தனது வானிலை அறிக்கையில், “மகாராஷ்டிராவில் நிலவும் குளிர் காலநிலைக்கு மத்தியில், மாநிலத்தின் மத்திய பகுதிகள் மற்றும் மராத்வாடா உள்ளிட்ட இடங்களில் வெப்பநிலை மேலும் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மத்திய மகாராஷ்டிரா மற்றும் மராத்வாடா போன்ற பகுதிகளில் வெப்பநிலை மேலும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, குளிர் கால நிலை மேலும் அதிகரிக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தமிழ்நாடு மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் குளிர் அதிகரிப்பு
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “மத்திய மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட குளிரான வானிலை நிலவுகிறது. உதாரணமாக, அஹல்யாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 5.5°சி பதிவாகியுள்ளது. இது ஆண்டின் மிக குறைந்த வெப்ப நிலை ஆகும்.
இதற்கிடையில், மகாராஷ்டிராவின் மற்றொரு முக்கிய நகரமான புனே நகரமும் குறிப்பிடத்தக்க வெப்பநிலை வீழ்ச்சியைக் கண்டுள்ளது. அதாவது, குறைந்த பட்ச வெப்பநிலை 7.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது, இது அதன் இயல்பான அளவை விட 4.3 டிகிரி செல்சியஸ் குறைவாகும்” என்றார்.
தமிழ்நாடு, ஆந்திராவில் கனமழைக்கு வாய்ப்பு
இதற்கிடையில், “வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 2 நாட்களில் தமிழக கடற்கரையை நெருங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், தமிழ்நாடு மற்றும் கடலோர ஆந்திராவில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, “அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை விசாகப்பட்டினம் புயல் எச்சரிக்கை மையத்தின் நிர்வாக அதிகாரி கேவிஎஸ் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தினசரி வானிலை அறிக்கையில், “மேற்கு இமயமலைப் பகுதிகள், கிழக்கு மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவின் உள் பகுதிகள் உட்பட பல பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 1-2 டிகிரி செல்சியஸ் குறைந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற பகுதிகளில் எப்படி?
மேலும், தென் தீபகற்ப இந்தியா மற்றும் வடகிழக்கு இந்திய பகுதிகள் தவிர, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குளிர் அதிகரித்து காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இம்மாத தொடக்கத்தில், தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்தது என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : Tamil Nadu Weather: அலர்ட் மக்களே.. சென்னையில் 2 நாட்கள் வெளுக்கப்போகுது மிக கனமழை!