பேசாமல் கல்லூரிகளை மூடிவிடலாம் – தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம்.. - Tamil News | The Madras High Court has condemned the Tamil Nadu government as saying that if it is unable to appoint professors to the government law colleges, the colleges may be closed | TV9 Tamil

பேசாமல் கல்லூரிகளை மூடிவிடலாம் – தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம்..

Published: 

02 Oct 2024 19:49 PM

சென்னையிலுள்ள கல்லூரி மட்டும் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி என்ற பெயரில் இயங்கி வருகிறது. பிற மாவட்டங்களில் இருக்கும் கல்லூரிகள் அரசினர் சட்டக் கல்லூரி என்றும் பெயரிடப்பட்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சட்டக் கல்லூரிகள் அனைத்தும் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தில் 7 அரசு கல்லூரிகளும், ஒரு சுயநிதிக் கல்லூரியும் இணைப்பு பெற்றுள்ளன.

பேசாமல் கல்லூரிகளை மூடிவிடலாம் - தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம்..

கோப்பு புகைப்படம்

Follow Us On

அரசு சட்ட கல்லுரிகளில் பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் அரசு தரப்பில் சட்டக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் சென்னையிலுள்ள கல்லூரி மட்டும் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி என்ற பெயரில் இயங்கி வருகிறது. பிற மாவட்டங்களில் இருக்கும் கல்லூரிகள் அரசினர் சட்டக் கல்லூரி என்றும் பெயரிடப்பட்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சட்டக் கல்லூரிகள் அனைத்தும் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தில் 7 அரசு கல்லூரிகளும், ஒரு சுயநிதிக் கல்லூரியும் இணைப்பு பெற்றுள்ளன.

தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லுரிகளில் காலியாக உள்ள இணைப் போரசிரியர் பணிக்கு நேரடி நியமனங்கள் மேற்கொள்ளக் கோரி வசந்தகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும் படிக்க: 1 ரூபாய்க்கு ஆட்டோ சவாரி.. பிளிப்கார்ட் அதிரடி சலுகை.. ஆச்சரியத்தில் வாய் பிளக்கும் மக்கள்!

கடந்த 6 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்தா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டக்கல்வி இயக்குனர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தமிழகத்தில் உள்ள 15 அரசு சட்டக் கல்லூரிகளில், அனுமதிக்கப்பட்ட 20 இணை பேராசிரியர் பணியிடங்களில் 19 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், மொத்தமுள்ள 206 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில், 70 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதில் மனுவை ஆய்வு செய்த நீதிபதி, அரசு சட்டக் கல்லூரிகளில், காலியாக உள்ள உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாமல், மாணவர்களுக்கு முறையான சட்டக் கல்வி வழங்க முடியாது என்றும் சட்டம் படித்து வழக்கறிஞராக விரும்பும் எதிர்கால தலைமுறையை அழித்து விடும் என அதிருப்தி தெரிவித்தார்.

மேலும் படிக்க: புதிய அரசியல் கட்சியை தொடங்கிய பிரசாந்த் கிஷோர்.. முதல் வாக்குறுதியே அதிரடி.. முழு விவரம்..

முறையான தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க முடியாவிட்டால், சட்டக் கல்லூரிகளை இழுத்து மூடி விடுவது நல்லது என தெரிவித்த நீதிபதி, தகுதியான ஆசிரியர்களை நியமிக்காமல், கவுரவ விரிவுரையாளர்கள் மூலம் பாடம் நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடும் எனவும், அதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் நிரப்புவதற்கான செயல் திட்டம் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில், தமிழக அரசின் சட்டத்துறை செயலாளரை அக்டோபர் 15ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அக்டோபர் 15ம் தேதிக்கு தள்ளி வைத்தார்..

கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
Exit mobile version