5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு வழக்கு.. 6 மாதம் கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்..

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் கடந்த 2016 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குருப் 1 தேர்வுக்கான தேர்வை நடத்தியது. இந்த தேர்வினை எழுதிய ராம்குமார் தேர்வில் தேர்ச்சி பெற விடைத்தாளினை மாற்றி வைத்து முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு உதவியதாக அவரிடம் பணியாற்றி ஒருவரும், டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள் சிலர் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு வழக்கு.. 6 மாதம் கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 30 Aug 2024 12:18 PM

டி.என்.பி.எஸ்.சி வழக்கு: டிஎன்பிஎஸ்சி குருப் 1 தேர்வு விடைத்தாள் மாற்றி வைத்து முறைகேடு செய்த வழக்கின் விசாரணை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க கீழமை நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் கடந்த 2016 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குருப் 1 தேர்வுக்கான தேர்வை நடத்தியது. இந்த தேர்வினை எழுதிய ராம்குமார் தேர்வில் தேர்ச்சி பெற விடைத்தாளினை மாற்றி வைத்து முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு உதவியதாக அவரிடம் பணியாற்றி ஒருவரும், டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள் சிலர் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கு சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கினை ரத்து செய்ய கோரி கருணாநிதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், விடைத்தாள் மாற்றி வைத்த விவகாரத்தில் தான் ஈடுபடவில்லை என்றும் முறையாக விசாரணை நடத்தாமல் ராம்குமாரிடம் வேலை பார்த்த தன் மீது காவல்துறை தவறாக வழக்குப்பதிவு செய்திருப்பதால், இது தொடர்பான கீழமை நீதிமன்ற வழக்கின் விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க: தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.. பொங்கல் பரிசு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

இந்த வழக்கு நீதிபதி சேஷசாயி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில்
அரசு குற்றவியல் வழக்கறிஞர் முனைவர் சி.இ பிரதாப் ஆஜராகி, கடந்த 2016 ல் நடைப்பெற்ற டிஎன்பிஎஸ்சி குருப்1 தேர்வில் விடைத்தாள் மாற்றி வைத்து மோசடி செய்த வழக்கில் இது வரை 65 சாட்சிகள் சேர்க்கப்பட்டு அதில் 10 பேரிடம் சாட்சி விசாரணையை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நடத்தி முடித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க: திருப்பதி லட்டுக்கும் இனி ஆதார் கார்டு கட்டாயம்.. தேவஸ்தானம் போர்டு அதிரடி!

இந்நிலையில் வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை ஏற்க கூடாது என வாதம் வைத்தார். அரசு தரப்பின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்ததுடன், டிஎன்பிஎஸ்சி குருப்1 தேர்வில் விடைதாள் மாற்றி மோசடி செய்தது தொடர்பான வழக்கை 6 மாதத்தில் விசாரணை நடத்தி முடிக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

Latest News