தமிழக உரிமைகளை பறித்தவர் மோடி துணை போனவர் எடப்பாடி – செல்வப் பெருந்தகை தாக்கு
கன்னியாகுமரி தொகுதி இந்தியா கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் முன்பு நடந்தது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விளங்கோடு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோரை ஆதரித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை பேசியதாவது: இந்த 18வது மக்களவை தேர்தல் ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்குமானது. தமிழ்நாட்டின் உரிமைகளை எடுத்தவர் நரேந்திர மோடி. துணை போனவர் எடப்பாடி பழனிச்சாமி. 2 பேரும் எதிரணியிலே நிற்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை […]
கன்னியாகுமரி தொகுதி இந்தியா கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் முன்பு நடந்தது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விளங்கோடு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோரை ஆதரித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை பேசியதாவது:
இந்த 18வது மக்களவை தேர்தல் ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்குமானது. தமிழ்நாட்டின் உரிமைகளை எடுத்தவர் நரேந்திர மோடி. துணை போனவர் எடப்பாடி பழனிச்சாமி. 2 பேரும் எதிரணியிலே நிற்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றி உள்ளோம். ஆனால் மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொடுக்கவில்லை.
தமிழகத்தில் ஆட்சி நடத்தி வருகின்ற மு.க.ஸ்டாலின் இரண்டரை ஆண்டில் 80 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். ஆனால் ஊழலை ஒழிப்போம் என்று கூறிய மோடி தற்போது ஊழலில் சிக்கியுள்ளார். அமலாக்கத்துறை வருவாய் துறை உள்ளிட்ட துறைகளை கையில் வைத்துக்கொண்டு தேர்தல் பத்திர முறையில் ரூ.8000 கோடி ஊழல் செய்து உள்ளார்கள்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி எம்பியை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை ஸ்ரீவைகுண்டம் அடுத்த திருப்புளியங்குடியில் பேசியதாவது:
கனிமொழி எம்பியை, கடந்த முறையைவிட இரு மடங்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றைகூட நிறைவேற்றாத மோடி தலைமையிலான பாஜ ஆட்சியை அகற்ற வேண்டும். ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையேயான மக்களவைத் தேர்தலில் பாசிச பாஜவை தோற்கடிக்க வேண்டும். மோடி கூட்டணி கட்சியினரும் எடப்பாடி கூட்டணி கட்சியினரும் டெபாசிட் இழக்க வேண்டும். இதற்காக ஏப்.12ல் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் நமது தலைவர் ராகுல் காந்தி, கனிமொழி எம்.பி.யை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குசேகரிக்க உள்ளார் என்றார்.