5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து கவிழ்ந்து விபத்து.. 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி..

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள குன்னூர் டோல்கேட் பகுதியில் வந்து கொண்டிருந்த போது 46 மாணவர்களை ஏற்றி கொண்டு வந்த ஒரு பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு இறங்கி வயலுக்குள் தலை குப்புற கவிழ்ந்தது. அப்போது பேருநதில் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் திடீரென பஸ் கவிழ்ந்தால் அலறியபடி கூச்சலிட்டனர்.

பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து கவிழ்ந்து விபத்து.. 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி..
கோப்பு புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 28 Sep 2024 11:42 AM

ஆண்டிபட்டி அருகே கன்னியாகுமரி பகுதியில் இருந்து பள்ளி மாணவ மாணவிகளை சுற்றுலாவுக்கு அழைத்து வந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயங்களுடன் 15-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் 2 ஆசிரியர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியில் செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளியில் இருந்து காலாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு நேற்று 90 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை அழைத்துக் தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு இரண்டு பேருந்துகளில் அழைத்து வந்தனர்.

இன்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள குன்னூர் டோல்கேட் பகுதியில் வந்து கொண்டிருந்த போது 46 மாணவர்களை ஏற்றி கொண்டு வந்த ஒரு பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு இறங்கி வயலுக்குள் தலை குப்புற கவிழ்ந்தது.

அப்போது பேருநதில் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் திடீரென பஸ் கவிழ்ந்தால் அலறியபடி கூச்சலிட்டனர். அப்போது இந்த சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் மற்றொரு பேருந்தில் வந்தவர்களும் உடனடியாக கவிழ்ந்த பேருந்திலிருந்து காயம் அடைந்த மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை பத்திரமாக மீட்டனர்.

இந்த விபத்தில் லேசான காயம் அடைந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த க.விலக்கு போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது.

மேலும் படிக்க: இனி வெப்பநிலை படிப்படியாக குறையும்.. 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எங்கே?

சமீப காலமாக தமிழகத்தில் அடிக்காடி சாலை விபத்து நடக்கிறது. நேற்று, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அங்குள்ள மம்சாபுரம் காந்திநகர் பகுதியில் நேற்று காலை சென்று கொண்டிருந்த பேருந்து எதிர்பாராத விதமாக பள்ளத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 10 க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: அம்மா செண்டிமெண்ட் பைக்.. மனமுருகி பேனர் வைத்த மகன்..

அதிவேகமாக பேருந்து ஓட்டியதே விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்துள்ளனர்.

அதேபோல், திருப்பூரில் இருந்து 30 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருச்செந்தூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து தாராபுரம் அருகே சென்றபோது திடீரென பேருந்தில் இருந்து புகை வருவதை கண்ட பயணிகள் கூச்சலிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தி அனைவரையும் உடனடியாக கீழே இறக்கினார். இதற்கிடையில் அரசு பேருந்து முற்றிலுமாக தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர்.

Latest News