5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Theni Election Results 2024 : தங்க தமிழ்செல்வன் வெற்றி.. தேனி மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள்!தொகுதியில்

தேனி தொகுதி தேர்தல் முடிவுகள்: தேனி மக்களவை தொகுதிகளில் திமுக சார்பில் தங்க தமிழ்செல்வனும்,  பாஜக கூட்டணியின் சார்பில் அமமுக பொதுச் செயலளார் டிடிவி தினகரனும், அதிமுக சார்பில் நாராயணசாமி என்பவரும் போட்டியிட்டனர்.   இதில் திமுகவின் தங்க தமிழ்செல்வன் 5 லட்சத்து 40 ஆயிரத்து 751 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  அமமுக சார்பில் போட்டியிட்ட டிடிவி தினகரன் 2 லட்சத்து 72 ஆயிரத்து 064 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். சுமார் 2,68,687 வாக்குகள் வித்தியாசத்தில் தங்க தமிழ் செல்வன் வெற்றி பெற்றார். 

Theni Election Results 2024 : தங்க தமிழ்செல்வன் வெற்றி.. தேனி மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள்!தொகுதியில்
தேனி மக்களவைத் தேர்தல் முடிவுகள்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 04 Jun 2024 20:18 PM

தேனியில் திமுக வெற்றி:  தேனி மக்களவை தொகுதிகளில் திமுக சார்பில் தங்க தமிழ்செல்வனும்,  பாஜக கூட்டணியின் சார்பில் அமமுக பொதுச் செயலளார் டிடிவி தினகரனும், அதிமுக சார்பில் நாராயணசாமி என்பவரும் போட்டியிட்டனர்.   இதில் திமுகவின் தங்க தமிழ்செல்வன் 5 லட்சத்து 40 ஆயிரத்து 751 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  அமமுக சார்பில் போட்டியிட்ட டிடிவி தினகரன் 2 லட்சத்து 72 ஆயிரத்து 064 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். சுமார் 2,68,687 வாக்குகள் வித்தியாசத்தில் தங்க தமிழ் செல்வன் வெற்றி பெற்றார்.  அதிமுகவின்  நாராயணசாமி 1,48,409 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தை பிடித்தார். நாம் தமிழர் கட்சியின் மதனுக்கு 71,878 வாக்குகள் கிடைத்தது.

முந்தைய தேர்தல் முடிவுகள்:

2009, 2014, 2019ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் அதிமுக இரண்டு முறை, காங்கிரஸ் ஒருமுறை வென்றுள்ளது. 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் தேனியைத் தவிர திமுக கூட்டணி 38 தொகுதிகளை கைப்பற்றியது. தேனியில் அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். 5 லட்சத்து 04 ஆயிரத்து 813 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 4 லட்சத்து 28 ஆயிரத்து 120 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். 76,963 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ஓ.பி.ரவீந்திரநாத். மேலும், அமமுகவில் இருந்த தங்க தமிழ்ச்செல்வன் 1,44,050 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். 2014ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவின் பார்த்திபன் 5 லட்சத்து 71 ஆயிரத்து 254 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுகவின் பொன் முத்துராமலிங்கம் 2 லட்சத்து 56 ஆயிரத்து 722 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். அமமுகவின் அழகுசுந்தரம் 1,34,362 வாக்குகள் பெற்று 3ம் இடத்தை பிடித்தார்.

தேனி மக்களவை தொகுதி:

தேனி மக்களை தொகுதி மிக முக்கியமான தொகுதியாக பார்க்கப்படுகிறது. தேனி தொகுதி அதிமுகவின் தொகுதி என கூறும் வகையில், இதுவரை 9 முறை அக்கட்சி வென்றுள்ளது. தமிழகத்தை அதிகமுறை ஆண்ட அதிமுகவின் இரு முதல்வர்களுக்கு (எம்ஜிஆர், ஜெயலலிதா) தேனியில் உள்ள ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் வென்று முதலமைச்சர் ஆனார்கள். 1984ஆம் ஆண்டு வெளிநாட்டில் சிகிச்சையில் இருந்த எம்ஜிஆரை வெற்றிபெற வைத்த தொகுதியும் ஆண்டிப்பட்டி தான். அதேபோல ஓ.பன்னீர்செல்வமும் வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.  தேனியில் 4 சட்டப்பேரவை தொகுதிகளும், மதுரை மாவட்டத்தின் சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதிகளும் தேனி மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. அதாவது, கம்பம், போடிநாயகனூர், பெரியகுளம் (தனி), ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) என உள்ளது.

வாக்காளர்களின் எண்ணிக்கை:

தேனி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 16 லட்சத்து 12 ஆயிரத்து 503 வாக்காளர்கள் உள்ளனர்.

  1. ஆண் வாக்காளர்கள் – 7,92,195
  2. பெண் வாக்காளர்கள் – 8,20,019
  3. மூன்றாம் பாலினத்தவர் – 217

 

Latest News