Theni Crime News: தம்பதி கொடூர கொலை.. ஒருநாள் முழுவதும் சடலத்துடன் காரில் சுற்றிய கும்பல்… அதிர்ச்சி வாக்குமூலம்! - Tamil News | theni couple murdered by friend gang in dharmapuri over rs 40 crore land police arrested 7 memeber | TV9 Tamil

Theni Crime News: தம்பதி கொடூர கொலை.. ஒருநாள் முழுவதும் சடலத்துடன் காரில் சுற்றிய கும்பல்… அதிர்ச்சி வாக்குமூலம்!

Published: 

30 Sep 2024 08:36 AM

ரூ.40 கோடி சொத்துக்காக தேனியைச் சேர்ந்த தம்பதியினரை கடத்திக் கொடூரமாக கொலை செய்து ஒருநாள் முழுவதும் காரிலேயே சடலங்களை வைத்து தருமபுரியில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தம்பதியினரை கடத்தி காரிலேயே சித்ரவதை செய்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Theni Crime News: தம்பதி கொடூர கொலை.. ஒருநாள் முழுவதும் சடலத்துடன் காரில் சுற்றிய கும்பல்... அதிர்ச்சி வாக்குமூலம்!

மாதிரிப்படம்

Follow Us On

ரூ.40 கோடி சொத்துக்காக தேனியைச் சேர்ந்த தம்பதியினரை கடத்திக் கொடூரமாக கொலை செய்து ஒருநாள் முழுவதும் காரிலேயே சடலங்களை வைத்து தருமபுரியில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் தடங்கம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன் ஆண், பெண் சடலங்கள் கத்திக் குத்து காயங்களுடன் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இருவரையும் வேறு இடத்தில் கொலை செய்து உடல்களை எடுத்து வந்து இங்கு வீசிச் சென்றது தெரியவந்தது.

தம்பதியை கொடூரமாக கொன்ற கும்பல்

மேலும் நடந்த தீவிர விசாரணையில் கொலை செய்யப்பட்டவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் (55), அவரது மனைவி பிரேமலதா (50) என்பது தெரியவந்துள்ளது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இவர்கள் ஆன்லைன் மூலம் டிரேடிங் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு எராளனமான சொத்துக்கள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கோவையில் உள்ள ஒரு கம்பெனியில் பெருமளவில் பணத்தை முதலீடு செய்திருந்த இவர்கள், சில மாதங்களுக்கு முன் சுமார் ரூ.40 கோடி முதலீட்டை திரும்ப பெற்றனர். அந்த பணத்தை வைத்து வேறு தொழில் செய்ய திட்டமிட்டனர். அந்த நேரத்தில் தேனியைச் சேர்ந்த தேவராஜ் என்பவருடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டது.

Also Read: ஆயத பூஜை, தீபாவளிக்கு ஊருக்கு போக ரெடியா? ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அவரிடம் முதலீட்டு பணத்தில் நிலம் வாங்குவது பற்றி பேசியுள்ளார். அவர்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்ட தேவராஜ், அவர்களுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கொடைக்கானலில் நிலம் வாங்கலாம் என்று கூறிய தேவராஜ், மணிகண்டன், பிரேமலதாவை காரில் அங்கு அழைத்து சென்றுள்ளார்.

ஒருநாள் முழுவதும் சடலத்துடன் காரில் சுற்றிய கும்பல்

தருமபுரியை சேர்ந்த ஒரு கார் ஓட்டுநருடன் தேவராஜ்க்கு பழக்கம் இருந்த நிலையில், தம்பதியிடம் பணம் பறிக்கும் திட்டத்தை அவரிடம் கூறி வரவழைத்துள்ளார். அப்போது, கார் ஓட்டுநருடன் மேலும் இரண்டு பேரை அழைத்து சென்றுள்ளார். தேனியில் இருந்து தேவராஜின் கூட்டாளிகள் 3 பேரும், மற்றொரு காரில் சென்றுள்ளனர்.

போடி பகுதியில் சென்றபோது, மணிகண்டன் தம்பதி சென்ற காரை வழிமறித்து, அதில் மற்றொரு காரில் வந்த 3 பேர் ஏறினர். அங்கு அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் தம்பதியினர் பணம் தர மறுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளை கும்பல், அவர்களை சரமாரியாக கத்தியால் குத்தி சித்ரவதை செய்துள்ளனர்.

அப்போதும பணம் பற்றி கூற மணிகண்டன் மறுத்துவிட்டார். இதையடுத்து, இருவரை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னல், உடல்களை எங்கு கொண்டு வீசுவது என்று தெரியாமல் ஒருநாள் முழுவதும் காரிலேயே உடல்களை வைத்துக் கொண்டு சுற்றியுள்ளனர். பின்னர், இறுதியில் தருமபுரியில் 2 பேரின் சடலங்களை வீசிவிட்டு சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Also Read: தென் மாவட்டங்களில் இன்று சம்பவம்.. வெளுக்கப்போகும் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை!

சிக்கிய 7 பேர்:

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  ரூ.40 கோடி சொத்துக்காக தம்பதியினரை கடத்தி கொடூரமாக கொலை செய்து உடலை வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகளும் கடுமையாக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீர்கெட்டு வருவதாகவும், தமிழ்நாட்டில் கொலை நடக்காத நாளே இல்லை என்றும் விமர்சித்து வருகின்றனர். கொலை, கொள்ளை சம்பவங்களை தடுக்க மாநில அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கூட தமிழக டிஜிபியை மாற்றி உத்தரவிட்டது. இருப்பினும், தொடர்ந்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.  இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த பிரச்சனை இருப்பவர்கள் இளநீர் குடிக்கவே கூடாதாம்..!
இந்தியாவின் பசுமையான சுற்றுலா இடங்கள் என்னென்ன தெரியுமா?
நண்டில் இப்படி ஒரு விஷயம் இருக்கா? அறிந்திடாத மருத்துவ நன்மைகள்..!
மன அழுத்தம் குறைய வேண்டுமா? அப்போ இது ஒன்னே போதும்.
Exit mobile version