5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Weather Alert: காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்.. மழை இருக்குமா? வானிலை நிலவரம் என்ன?

வட கடலோர மாவட்டங்களுக்கு கிடைக்க வேண்டிய மழை பொய்து போனது. அதனை தொடர்ந்து தென் மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது. குறிப்பாக குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பதிவானது. வட கடலோர மாவட்டங்கள் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இந்நிலையில் நவம்பர் 2வது வாரத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடையும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Tamilnadu Weather Alert: காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்.. மழை இருக்குமா? வானிலை நிலவரம் என்ன?
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 11 Nov 2024 09:12 AM

தமிழ்நாட்டில் கடந்த மாதம் இறுதியில் வட கிழக்கு பருவ மழை தொடங்கியது. அதனை தொடர்ந்து நவம்பர் 6 தேதி வாக்கில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது வட கடலோர மாவட்டங்களை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டது. ஆனால் அது தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்து சென்றது. இதனால் வட கடலோர மாவட்டங்களுக்கு கிடைக்க வேண்டிய மழை பொய்து போனது. அதனை தொடர்ந்து தென் மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது. குறிப்பாக குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பதிவானது. வட கடலோர மாவட்டங்கள் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இந்நிலையில் நவம்பர் 2வது வாரத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடையும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தீவிரமடையும் வட கிழக்கு பருவ மழை:


அதன்படி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இது அதற்கடுத்த இருதினக்களில் மேற்கு திசையில், தமிழக – இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளரின் எக்ஸ் தள பதிவில், “ இந்த சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக்ககூடும் என்றும் வட கிழக்கு பருவ மழை மெல்ல மெல்ல தீவிரமடையும். இதன் காரணமாக நாளை இரவு முதல் வட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும். மேலும், காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வை பொறுத்து உள் மாவட்டங்களிலும் மழை இருக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 5 மணி நேர மின் தடை.. எந்தெந்த பகுதிகளில்?

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவத்இல் என்ன தாமதம்?

நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அது உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, வங்கக்கடலில் நிலவும் சுழற்சி அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த இருதினக்களில் மேற்கு திசையில், தமிழக – இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: லெபனானில் நடத்தப்பட்ட பேஜர் தாக்குதல்.. நாங்களே பொறுப்பு – ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்..

நாளை முதல் 15 ஆம் தேதி வரை கனமழை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 ஆம் தேதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News