EB Rate : ஒரு கோடி வீடுகளுக்கு மின் கட்டணத்தில் மாற்றமில்லை.. லிஸ்டில் நீங்க இருக்கீங்களா?
Tamilnadu EB Rate Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ஒரு கோடி நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது. 2.47 கோடி வீட்டு மின் நுகர்வோர்களில், ஒரு கோடி நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தில் மாற்றமில்லை என்று தெரிவித்துள்ளது.
ஒரு கோடி பேருக்கு மின் கட்டணத்தில் மாற்றமில்லை: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ஒரு கோடி நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது. 2.47 கோடி வீட்டு மின் நுகர்வோர்களில், ஒரு கோடி நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தில் மாற்றமில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதோடு, 63 லட்சம் பேருக்கு மாதம் 5 ரூபாய் மின் கட்டணம் அதிகரிக்கும். 35 லட்சம் நுகர்வோர்களுக்கு மாதம் ரூ.15 மட்டுமே மின் கட்டணம் அதிகரிக்கும். 25 லட்சம் நுகர்வோர்களுக்கு மாதம் 25 ரூபாய் மின் கட்டணம் அதிகரிக்கும்.
Also Read: சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மின்தடை.. லிஸ்டில் இருக்கும் ஏரியாக்கள் இதோ!
13 லட்சம் நுகர்வோர்களுக்கு மாதம் ரூ.40 மட்டுமே மின் கட்டணம் அதிகரிக்கும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், வீட்டு மின் நுகர்வோர்களுக்கு நிலைக்கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் அனைத்து நுகர்வோர்களும் பயன் அடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
யாருக்கெல்லாம் கட்டணம் உயர்வு?
வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 0 முதல் 400 யூனிட் பயன்பாட்டுக்கான மின் கட்டணம் ரூ.4.60ல் இருந்து 4.80ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 401 முதல் 500 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ரூ.6.15ல் இருந்து ரூ6.45ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 501 முதல் 600 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ரூ. 8.15ல் இருந்து ரூ.8.55ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
601 முதல் 800 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ரூ.9.20ல் இருந்து ரூ.9.65ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 801 முதல் 1000 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ரூ.10.20ல் இருந்து ரூ.10.70ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு இனி ரூ.11.80 வசூலிக்கப்படும். வணிக பயன்பாட்டை பொருத்த வரை 50 கிலோ வாட்டிற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.9.70 காசுகள் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 45 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு யூனிட் ரூ.10.15 ஆக உள்ளது.
மேலும், குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிப்பாட்டு தளங்கள், தாழ்வழுத்த தொழிற்சாலைகள் ஆகிய மின்கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
Also Read: தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா?