5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TN Deputy CM : ஏமாற்றம் இருக்காது, மாற்றம் இருக்கும்.. துணை முதலமைச்சர் குறித்த கேள்விக்கு மு.க.ஸ்டாலி பதில்!

CM MK Stalin | கடந்த சில மாதங்களாக, விளையாட்டு துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலை உறுதி படுத்தும் விதமாக அவ்வப்போது மேடை பேச்சுகளில் மூத்த அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று தெரிவித்து வந்தனர்.

TN Deputy CM : ஏமாற்றம் இருக்காது, மாற்றம் இருக்கும்.. துணை முதலமைச்சர் குறித்த கேள்விக்கு மு.க.ஸ்டாலி பதில்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
vinalin
Vinalin Sweety | Updated On: 24 Sep 2024 12:00 PM

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக துணை முதலமைச்சர் யார் என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பதில் அளித்துள்ளார். இந்த நிலையில், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : DMK Alliance : திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை விமர்சித்த விசிக துணை பொதுச்செயலாளர்.. ஆ.ராசா பதில் கருத்து!

2021 சட்டமன்ற தேர்தலில் 125 இடங்களை பிடித்து ஆட்சி அமைத்த திமுக

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாதக உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிட்ட நிலையில், திமுக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக தலைமையிலான இந்த ஆட்சியில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றார். அவர் முதலமைச்சராக பதவியேற்ற முதல் நாளே பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட 3 முக்கிய கோப்புகளில் கையெழுதிட்டார். முதலமைச்சரின் இந்த 3 முக்கிய அறிவிப்புகள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில், திமுக ஆட்சி அமைக்கும்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியானது. அப்போது அந்த தகவல்கள் உண்மை இல்லை என மறுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சில நாட்களிலேயே அவசர அவசரமாக அவர் விளையாட்டு துறை அமைச்சராக பதவியேற்றார்.

இதையும் படிங்க : Donald Trump : வெற்றி பெறவில்லை என்றால் இதுவே எனது கடைசி தேர்தலாக இருக்கும்.. டொனால்ட் டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு!

சட்டமன்ற உறுப்பினரில் இருந்து அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின்

இதேபோல கடந்த சில மாதங்களாக, விளையாட்டு துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலை உறுதி படுத்தும் விதமாக அவ்வப்போது மேடை பேச்சுகளில் மூத்த அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்பதற்காக அறிவாலயத்தில் தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அப்போது அது குறித்து விளக்கமளித்த உதயநிதி, துணை முதலமைச்சரை தேர்வு செய்வது முதலமைச்சரின் முடிவு, அதை அவர் பார்த்துக்கொள்வார் என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க : Gold Price September 24 2024 : உச்சத்தை தொட்ட தங்கம் விலை.. ஒரு கிராம் இவ்வளவா?.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!

துணை முதலமைச்சர் யார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகிறது. இது குறித்து உங்களது கருத்து என்ன என செய்தியார்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “ஏமாற்றம் இருக்காது, மாற்றம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Latest News