5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cow Attack: மாடு முட்டி அரசு பேருந்து ஏறி ஒருவர் உயிரிழப்பு.. நெல்லை மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை..

Tirunelveli Cow Attack: நேற்று திருநெல்வேலியில் இருக்கும் வண்ணாரப்பேட்டை பகுதியில் இரு மாடுகள் சுற்றி திரிந்தது. அந்த இரண்டு மாடுகளும் சண்டை போட்டுக்கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜவை மாடுகள் சட்டென தாக்கியது. சற்றும் எதிர்ப்பார்க்காத விதமாக மாடுகள் தாக்கியதில் அவர் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து சாலையின் நடுவே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த வரசு பேருந்து அவர் மீது ஏறி சமபவ இடத்திலேயே உயிரிழ்ந்தார்

Cow Attack: மாடு முட்டி அரசு பேருந்து ஏறி ஒருவர் உயிரிழப்பு.. நெல்லை மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை..
மாதிரி புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 18 Nov 2024 11:13 AM

நெல்லையில் மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு: சமீப காலமாக மாடுகள் மனிதர்களை காரணமே இல்லாமல் முட்டும் சம்பவம் அதிகம் நடந்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சம்பவத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்போது மாடுகளை பார்த்தாலே அச்சம் ஏற்படும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். முக்கியமாக மாட்டின் உரிமையாளர்கள் அதனை கட்டி வைக்காமல் இருப்பதே காரணம் என மக்கள் தெரிவிக்கன்றனர். அந்த வகையில் நேற்று திருநெல்வேலியில் இருக்கும் வண்ணாரப்பேட்டை பகுதியில் இரு மாடுகள் சுற்றி திரிந்தது. அந்த இரண்டு மாடுகளும் சண்டை போட்டுக்கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜவை மாடுகள் சட்டென தாக்கியது. சற்றும் எதிர்ப்பார்க்காத விதமாக மாடுகள் தாக்கியதில் அவர் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து சாலையின் நடுவே விழுந்தார்.

அப்போது அந்த வழியாக அரசு பேருந்து ஒன்று வந்துக்கொண்டிருந்தது. நீதிமன்ற ஊழியர் சாலை நடுவே விழவும், அந்த பேருந்து அந்த பகுதியை கடக்கவும் சரியாக இருந்தது. இதனால் வேலாயுத ராஜ சாலை நடுவே விழுந்ததும், அந்த வழியாக வந்த அரசு பேருந்து அவர் மீது ஏறியது. இதனால் படுகாயம் அடைந்த வேலாயுதராஜ சம்பவ இடத்துலையே உயிரிழந்தார். மாடு முட்டி நீதிமன்ற ஊழியர் மீது அரசு பேருந்து ஏறி உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது.

Also Read: பூமியை தாக்க வரும் ஆபத்து நிறைந்த விண்கல்.. எச்சரிக்கை விடுத்த நாசா..!

தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடுகள் முட்டும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில்,ன் நெல்லை மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மாட்டின் உரிமையாளர்கள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் மாடுகளை கொட்டகையில் வைத்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

மேலும், நெல்லை மாநகரப் பகுதிகளில் சுற்றித்திரிந்த 47 மாடுகள் பிடிக்கப்பட்டு வழக்கு பதிவுn செய்யப்பட்டுள்ளது. உரிமையாளர்களிடம் 13 ஆயிரம் ரூபாய் அபராத தொகையும் வசூலிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் நேற்று மாடு முட்டி அரசு பேருந்து ஏறி நீதிமன்ற பணியாளர் ஒருவர் இறந்ததை அடுத்து மாநகர பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து வருகின்றனர். இதுவரை தச்சநல்லூர் மண்டலத்தில் பதினெட்டு மாடுகளும் பாளையங்கோட்டை மண்டலத்தில் 6 மாடுகளும் மேலப்பாளையம் மண்டலத்தில் 12 மாடுகளும் திருநெல்வேலி மண்டலத்தில் 11 மாடுகள் என மொத்தம் 47 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Also Read: 2024-25 வருமான வரியை யார் தாக்கல் செய்ய வேண்டும்? செய்யாவிட்டால் என்ன நடக்கும்?

Latest News