5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

திருநெல்வேலி: பரோலில் சென்ற கைதி தலைமறைவு.. 20 ஆண்டுகளுக்கு பின் கைது..

திருப்பதி பெருமாளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, நான்குநேரி கோர்ட்டில் நடந்த விசாரணையில், தண்டனை அளிக்கப்பட்டு, நெல்லை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் இவர். பின், 2004ம் ஆண்டு மத்திய சிறையில் இருந்து பரோல் கிடைத்தது. பரோலில் வந்த அவர் குடும்பத்தினருடன் நேரம் கழித்தார்.

திருநெல்வேலி: பரோலில் சென்ற கைதி தலைமறைவு.. 20 ஆண்டுகளுக்கு பின் கைது..
மாதிரி புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 24 Nov 2024 15:41 PM

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள மாயனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி பெருமாள். இவருக்கு வயது 47. இவர் கூலி தொழிலாளி. இவர் மீது, 1995ம் ஆண்டு மூன்றடைப்பு போலீசில் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, நான்குநேரி கோர்ட்டில் நடந்த விசாரணையில், தண்டனை அளிக்கப்பட்டு, நெல்லை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் இவர். பின், 2004ம் ஆண்டு மத்திய சிறையில் இருந்து பரோல் கிடைத்தது. பரோலில் வந்த அவர் குடும்பத்தினருடன் நேரம் கழித்தார்.

மேலும் படிக்க: அடுத்த 6 நாட்களுக்கு பொளக்க போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்?

ஆனால் பரோல் முடிந்தும் அவர் சிறைக்கு திரும்பாமல் தலைமறைவானார். இதனை தொடர்ந்து மூன்றடைப்பு போலீசார் அவர் மீது மற்றொரு வழக்கை பதிவு செய்தனர். இதற்காக தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் அவர் கேரளாவில் தலைமறைவாக இருப்பது போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். கேரளாவில் பல ஆண்டுகளாக பதுங்கி இருந்து வாழ்க்கை நடத்தி வந்த வரை நேற்று போலீசார் கைது செய்தனர். கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின் திருப்பதி பெருமாளை மீண்டும் மத்திய சிறையில் அடைத்தனர். சுமார் 20 ஆண்டுகளாக பரோலில் வந்த கைதி தலைமறைவாக பதுங்கி இருந்தது அப்ப்குதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க:  Rameswaram: இது லிஸ்டுலேயே இல்லையே.. ராமேஸ்வரத்தில் ஆன்மீக படகு சவாரி!

Latest News